பக்கம்:கற்பக மலர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 & கற்பக மலர்

கிலேக்கு ஏற்ப வெவ்வேருக அமையும் அறங்களும் உண்டு. இவற்றை அவ்வப்போது பெரியவர்கள் வரை யறுப்பார்கள். எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத் துக்கும் எல்லா மக்களுக்கும் அமையும் அறங்கள் உண்டு. அகாதியாக வரும் சில அறங்களும் உண்டு. இறைவன் தன் அருளானேயால் அந்தத் தொல்லறங் களே அமைத்தருளினன். அவன் காட்டிய வழியே நின்று உலகத்திற்கு நலம் செய்ய வந்த பெரியோர்கள் வகுத்த நெறிகளும் அறத்தின்பாற் படும். ஆகவே, அறத்தின் மூலமாக நிற்பவன் இறைவன் என்பதை உணரலாம். -

அறம் கடல் போன்றது; எல்லே இல்லாதது. அதன் வடிவாக இருக்கும் இறைவனே அறக் கடல் என்று சொல்வது பொருத்தமானது. வள்ளுவர் இறை வனே அறவாழி அந்தணன் என்கிருர். அந்தணன் என்பது அழகிய தட்பத்தை உடையான் என்று பொருள்படுவது. தட்பம்-குளிர்ச்சி; இங்கே இறைவ னிடம் உள்ள கருணையையே தட்பமென்று கொள்ள வேண்டும்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்

என்ற குறளில் எல்லா உயிர்களுக்கும் அருள் பூண்டு ஒழுகுவதைச் செந்தண்மையாகக் குறித்தார். இறைவன் அருட்கடலாகவும் இருக்கிறவன். உலகினருக்குரிய அறநெறிகளே வகுத்தற்கு அவ்வருளே காரணம். அவனுடைய தயையே இந்த அறத்துக்கு மூலமானது;. தயாமூல தன்மம் என்று சொல்வார்கள். அந்தணனுக, அழகிய அருளே வடிவினகை இருப்பதனால் அவன் அறப் பெருங்கடலாகவும் விளங்குகிருன். t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/87&oldid=553300" இலிருந்து மீள்விக்கப்பட்டது