பக்கம்:கற்பக மலர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவாழி அந்தணன் 8 f அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

எதிர்மறை முகத்தால், சேர்ந்தவர்க் கல்லால் பிற கடல்களைக் கடத்தல் அரிது’ என்று சொல்வதல்ை, சேர்ந்தவர்கள் பிற கடல்களேக் கடத்தல் எளிது’ என்ற கருத்து அதன்கண்ணே பொதிந்திருப்பதை உணரலாம். தாள் சேராதார் மிகுதியாக உள்ள உலகத்துக்குரிய அறிவுரையைப் புகல வந்தவராதலின், அவர்களுக்கு அச்சம் தோன்ற, இவ்வாறு செய்யாவிட்டால் இன்ன துன்பம் நீங்காது’ என்று கூறினர். -

இதற்குப் பரிமேலழகர், அறக்கடலாகிய அந்தணனது தாளாகிய புணேயைச் சேர்ந்தார்க்கு அல்லது, அதனிற் பிறவாகிய கடல்களே நீந்தல் அரிது’ என்று உரை கூறி, 'அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனேப் பொருளும் இன்பமும் பிற எனப்பட்டன என்று விளக்கினர். - - . . . ... -

இந்தக் குறளுக்கு வேறு வேறு வகையில் பொருள் கூறுபவர்கள் உண்டு. அறவாழி என்பதற்குத் தர்ம சக்கரம் என்று உரை கூறுவார் சிலர். இதைப் பரிமேலழகரே குறிக்கின்ருர்; அறவாழி என்பதனைத் தரும சக்கரமாக்கி, அதனேயுடைய அந்தணன் என்று உரைப்பாரும் உளர்' என்று எழுதியுள்ளார். -

பிற ஆழி என்பதற்குப் பிற கடல்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருத்தலின், முன்னுள்ள ஆழி என்பதற்கு அவற்றிற்கு இனமாகிய மற்ருெரு கடலேக் கொள்வதே பொருத்தம். பிற ஆழி என்பதிலுள்ள ஆழி என்பதற்கும் சக்கரங்கள் என்று பொருள் கொள்ள,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/90&oldid=553303" இலிருந்து மீள்விக்கப்பட்டது