பக்கம்:கற்பக மலர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

招2 கற்பக மலர்

வாய்ப்பு இருந்தால் அற ஆழி என்பதற்குத் தர்ம சக்கரம் என்று பொருள் கொள்ளலாம். பிற சக்கரங்களேக் கடத்தல்’ என்று உரை கூறுவதற்கு அங்கே இடமில்லை; ஆதலின் பிற கடல்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்; நீந்தல் என்பது கடல் என்ற பொருளோடு இயைவதைக் காண்க. பிற என்று இனத்தைச் சுட்டும் சொல் இருத்தலின் முன்புள்ள ஆழியும் கடல் என்றே கொள்ளவேண்டும்.

அறவாழி என்பதற்குத் தருமக்கடல் என்று பொருள் கொண்டு பிறவாழி என்பதற்கு அதருமமாகிய பாவக் கடல் என்று பொருள் கொண்டார் பரிதியார் என்னும் உரையாசிரியர். அறம், மறம் என்பன ஒருங்கு வைத்து எண்ணப்படுவதல்ை அறக்கடலைச் சொன்ன வர் பிற ஆழி என்பதல்ை மறக்கடலாகிய பாவக் கடலேக் குறித்தார் என்று சொல்வது பொருத்தமாகத் தோற்றலாம். ஆனல் பிற என்பது பன்மை. பிறிதாழி ந்ேதலரிது என்று இருந்தால் பாவக்கடல் என்று ஒருமை யாகப் பொருள் கொள்ளலாம். பிற என்று இருத்தலின் அறத்தோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் ஒன்றுக்கு மேற்பட்டவற்றையே அது குறிக்கும். ஆதலின் பாவக்கடல் என்ற ஒருமையைக் கொள்வது பொருந்தாது.

காளிங்கர் என்னும் உரைகாரர் பிறவாழி என்ப தற்குப் பிறவிப்பெளவம் என்று உரை கூறினர். பிறவு ஆழி என்று பிரித்துப் பொருள் கொண்டார் அவர். பிறவு-பிறவி, பிறவாழிக் கரை கண்டாரே (வில்லி பாரதம், கண்ணன் துாது, 1) என்பதில் பிறவு என்பது பிறவியென்னும் பொருளில் வந்திருப்பதைக் ö了6况Tö。

'இறைவன் திருவடியைச் சேர்ந்தவர்கள் பிறவிக் க்டலே நீந்துவர் என்ற கருத்தைப் பின்னே திருவள்ளுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/91&oldid=553305" இலிருந்து மீள்விக்கப்பட்டது