பக்கம்:கற்பக மலர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப் பெருங்கடல் 8

அமைத்துக்கொண்டு, அதைச் சொல்வதை மரபாக வைத்துக்கொண் டிருக்கின்றனர். உயிரினங்கள் ஏழு வகைப்படுமென்றும், எண்பத்து நான்கு லட்சம் வேறு பாட்டை உடையன என்றும் சொல்வர். உரை சேரும் எண்பத்து நான்கு நூருயிரமாம் யோனிபேதம்’ என்பது தேவாரம்.

ஏழு வகையான உயிரினங்கள் ஊர்வன, மானிடம், நீர்வாழ்வன, பறவை, நாற்காலன, தேவர், தாவரம் என்பவை. பிறப்பு ஏழு வகை என்பதைப் பல இடங்களில் திருவள்ளுவர் குறித்திருக்கிருர்,

எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழியிறங்காப் பண்புடை மக்கட் பெறின். - (62) எழுமை எழுபிறப்பும் உள்ளுவர், தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. (107)

அவர் எழுபிறப்பு என்று குறிக்கும் இடங்களில் ஏழு வகையான பிறப்பு என்றே பொருள் கொள்ளுவர் பரி. மேலழகர். எழுமை என்றும் பல இடங்களில் வள்ளுவர். சொல்கிருர். அதற்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்கள் என்று பொருள் கூறுவார் உரையாசிரியர். எழுமை என்ப தும் எழுபிறப்பு என்பதும் ஒன்றே என்று கொள்வதற்கு இல்லை. இரண்டும் வெவ்வேறு பொருளை உடையன என்பதை, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்” என்ற தொடர் காட்டும். - * - ... "

எழுமை என்பது ஏழன் தன்மை என்ற பொருண் உடையது என்று கொள்வர் சிலர். மை என்பது தனியே பிறப்பைக் குறிக்காவிட்டாலும் அடையோடு, சேர்ந்து பிறப்பைக் குறிக்க வரும். இம்மை, அம்மை, மறுமை, ஒருமை என்பவற்றில் மை என்பது பிறவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/94&oldid=553308" இலிருந்து மீள்விக்கப்பட்டது