பக்கம்:கற்பக மலர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப் பெருங்கடல்

பிறவி ஒன்றன்பின் ஒன்ருகத் தொடர்ந்து வருவது என்பது, இந்த நாட்டிலுள்ள எல்லாச் சமயத்தினரும் உடம் பட்ட கொள்கை. ஒரே பிறவிதான் உயிருக்கு உண்டு; அப்பால் சொர்க்கமோ நரகமோ கிடைக்கும் என்ற கொள்கை இந்த காட்டுச் சமயத்தினரிடம் இல்லை. பிறவி தொடர்ந்து வருவதாயினும் அதற்குத் தொடக்கம் எங்கே, முடிவு எங்கே என்று சொல்ல முடிவதில்லே. ஒரு பிறவியில் செய்த செயல்களின் பயணுக மறுபிறவி கிடைக்கிறது; அந்தப் பிறவியிலும் நல்வினே தீவினைகளைப் புரிவதனுல் மீட்டும் பிறவி வருகிறது.

ஓரறிவுயிராகிய மரம் செடி கொடி முதல் ஆறறிவுயி ராகிய மனிதன் வரையில் உள்ள வகைகளே எண்ணிக் கணக்கிட முடியாது. புழுக்களேப் பார்த்தாலே எத்தனேயோ வகைகள் இருக்கின்றன. இப்போது நுண்ணுடியினலே பல புதிய புதிய நுண்புழுக்களே விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிருர்கள். இன்னும் காணுதவை எத்தனையோ இருக்கக்கூடும். படைப்பில் உயிரினங்களின் வகைகள் எல்லேயில்லாமல் பரந்துள்ளன என்பதை முன்பு இருந்த மெய்ஞ்ஞானிகளும் சொன்னர்கள்; இன்றுள்ள விஞ்ஞானி களும் சொல்கிருர்கள். -

கணக்குக்கு அடங்காவிட்டாலும் உடம்போடுள்ள உயிர்க்கூட்டங்களுக்கு ஏதோ ஒரு வகையில் கணக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/93&oldid=553307" இலிருந்து மீள்விக்கப்பட்டது