பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூபதியின் ஒருநாள் அலுவல்

13



களாக உண்டு என்று கூறிக்கொள்வதிலே அவருக்கு ஒரு வகையான சந்தோஷம். டிப்டி கலெக்டர், ஆரம்பித்தார் தமது அர்ச்சனையை.

"இடியட்! கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான், கொஞ்சம்கூட மட்டுமரியாதை தெரியாமல் சுத்த ஞான சூன்யம். வைசிராயின் பெயர் தெரியவில்லை. இன்னமும் விலிங்டன் தான் வைசிராயாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறான். இவனெல்லாம், ஊருக்குத் தலைவர்களாக வேண்டும் இந்த உதவாக்கரைக்கு ராவ்பகதூர் வேண்டுமாம்!! எப்படியோ, பணம் சேர்ந்துவிட்டது, ஊரை ஏமாற்றிச் சேர்த்துக்கொண்டான். பணம் இருப்பதாலேயே, இவனுக்கு நாமெல்லாம் மதிப்புத் தரவேண்டுமாம். மடையன்! ஒரு சாதாரண கிளார்க்குக்குத் தெரிந்த விஷயஞானம் கூட இவனுக்கு என்ன தெரியும், மளமளவென்று அளக்கிறான், அந்த ஆபீசர் தெரியும், இந்தக் கலெக்டர் தெரியுமென்று. தெரிந்து என்ன, தெரியாமற்போனால் என்ன? எழுத்துப் பிழையில்லாமல் இன்னமும், தன்கையெழுத்தைப் போடக் கூடத் தெரியாது. நாமும் உத்யோகம் செய்கிறோம்; தலை நரைக்கிறவரையில், என்ன காண்கிறோம்! அந்த இடியட் 'இன்கம்டாக்ஸ்' நான்தான் இந்த ஜில்லாவிலேயே அதிகம் கட்டுகிறேன் என்று பெருமையாகப் பேசிக்கொள்கிறான். இவனுக்கு எஸ்டேட் மானேஜர், பி.ஏ.வாம் ! எவ்வளவு அலட்சியமாகப் பேசுகிறான் தெரியுமோ? பணம் போய் எப்படியோ மாட்டிக்கெண்டு இப்படிப்பட்ட இடியட்டுகளை நம்ம வாயினாலேயே புகழ்ந்து பேசவேண்டிய நிலைமையைக் கூட உன்டாக்குகிறது!" என்று சுடச்சுடப் பேசினார், மிஸ்டர் J.ஈஸ்.

"பணம் இருக்கலாம், நீர் பெரிய பங்களாவிலே வாழலாம், அதை எல்லாம் இங்கே சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை, உம்மிடம் சொத்து இருப்பதாலேயே,