பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவைகளின் களஞ்சியம்

107


வீரச்சுவை

இது 'பெருமிதம்' என்றும் வழங்கப் பெறும். எந்தச் சிக்கலான சந்தர்ப்பத்திலும் மனங் குன்றாது செயலாற்றுவதை வீரம் மிக்க செயல் என்று கருதுவர். வீரனது அடையாளம் போர்க்களத்தில் முன்னணியில் நிற்பது மட்டுமல்ல ; ஆயுள் முழுவதும் தன் புலன்களை அடக்கப் பாடுபடுவதும்கூட வீரம் உள்ளிருப்பதைக் காட்டுவதாகும். எனவே, புலனைந்தையும் அடக்கியாண்ட முற்றத்துறந்த முனி வரையும் சிறந்த வீரர்கள் என்றே சொல்லவேண்டும். தன் உயிரைத் திரணமாக மதித்து செயலாற்றுவதையும் வீரம் என்று வழங்கலாம்.

தேவியை வழிபடும் வீரர்களைக் குறிப்பிடுமிடத்து வீரச்சுவை வெளிப்படுகின்றது. தாங்கள் கோரும் வரத்தைத் தரும்படியும் அதற்கு ஈடாகத் தங்கள் உறுப்புக்களை அறிந்து தருவதாகவும் வீரர்கள் பரவும் முழக்கம் எம்மருங்கும் கேட்கப்படுகின்றது. சில வீரர்கள் ஓமத்தீயை வளர்த்துத் தங்கள் விலாவெலும்புகளைச் சமித்தாகவும் செந்நீரை ஆகுதியாகவும் ஊற்றுகின்றனர். இதனைக் கவிஞர்,

சொல்லரிய ஓமத்தி வளர்ப்ப ராலோ
தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி வல்லெரியின் மிசையெரிய விடுவராலோ
வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ[1]

[பழுஎலும்பு-விலா எலும்பு; தொடர- தொடர்ந்தார்

போல்; வாங்கி-பிடுங்கி; குருதி-செந்நீர்]

என்ற ஓவியத்தால் புலனாக்குகிறார். இன்னும் சிலர் தம் தலைகளை அறுத்துத் தேவியின் கையில் கொடுப்


  1. தாழிசை-110