பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.கடைதிறப்பின் உட்பொருள்

23


கொண்டு கவலையுற்றிருந்தனர் என்று கருதுவதற்கு ' கடைதிறப்பு ' என்ற பகுதியுள் வரும் செய்யுட்களில் யாதொரு குறிப்பும் காணப் பெறவில்லை. ஆனால், அதற்கு மாறாக மகளிர் தத்தம் கொழுநருடன் இருந்து அவர்களுடன் ஊடல் கொண்டும் கூடல் புரிந்தும் மகிழ்கின்ற நிலையில் அம்மகளிரைக் கடை திறக்கும்படி வேண்டும் பாடல்களே மிகுதியும் காணப் பெறுகின்றன. மகளிரின் கலவி புலவிகளை ஆடவர் எடுத்துக் கூறி அவர்களை விளித்தல் அசம்பாவிதம். ஒருகால் கற்பனைக் கதையுள்ள இலக்கியத்தில் அவ்வாறு கொள்ளல் மரபாக இருந்தாலும், வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தில் அவ்வாறு மரபாகக் கொள்ளுதல் சிறிதும் பொருத்தமன்று. அதிலும் சயங்கொண்டார் அத்தகைய சூழ்நிலையை உண்டாக்க ஒருப்பட்டார் என்று கருதுவது பெரியதோர் அபவாதமாகும். தக்கயாகப் பரணி, இரணியவதைப் பரணிகளுள் வரும் 'கடைதிறப்பு’க்களில் வானர மகளிர், நீரர மகளிர், மேரு, கயிலைகளில் வாழும் மகளிர் முதலியோர் கடை திறக்குமாறு விளிக்கப் படுகின்றனர். கவிஞரே அவ்வாறு விளிப்பதாகக் கொள்ளின் ஒட்டக்கூத்தரும் இரணியவதைப் பரணியாசிரியரும் வானம், மேரு, கயிலை முதலிய இடங்களுக்குச் சென்று அவ்விடங்களில் தூக்கத்தினுல் பகலில் கதவடைத் திருக்கும் மகளிரைக் கதவு தட்டுபவராகக் கூற வேண்டும். இது எவ்வாற்றானும் பொருந்தாது என்பது எண்ணிப் பார்ப்பார்க்கு எளிதில் புலனாகும். அன்றியும், இரவில் நிகழ்ந்த ஊடல் கூடல் முதலிய செய்கைகளால் அயர்ந்து துயிலெழாது வைகறையில் உறங்கிக் கிடக்கும் மகளிரை அவர்கள் செயல்