பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கற்பனை ஊற்று

91


கும் வண்டுகளையும் வெருவியோடச் செய்து விடுகின்றன.

கடுத்த விசையிருள் கொடுத்த உலகொரு
கணத்தில் வலம்வரு கணிப்பில்தேர்
எடுத்த கொடிதிசை இபத்தின் மதமிசை
இருக்கும் அளிகளை எழுப்பவே.[1]

[கடுத்த-மிகுந்த விசைவேகம்; கணிப்பில்-அளவிடுதலில்; ::திசைஇபம்-திக்கு யானை அளிவண்டு]

என்பது சயங்கொண்டாரின் கற்பனை ஓவியம். இவ் வாறு பல இடங்களில் உயர்வு நவிற்சி யணிகள் நூலை அலங்கரிக்கின்றன.

சொல்லணிகள்

மேற்கூறிய பொருளணிகளைத் தவிர சொல்லணிகளும் நூலினை அலங்கரிக்கின்றன. அவற்றிலுள்ள சிலேடை நயம் அவ்வணிகனின் தரத்தை இன்னும் உயர்த்துகின்றது. கடை திறப்பில் ஒரு தாழிசை,

காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ[2]

[காஞ்சி-இடையணி, காஞ்சிநகர்;கலிங்கம்-மேலாடை, கலிங்கநாடு; குலைந்த-நிலைபெயர்ந்த, அழிந்த]

இத்தாழிசையில் 'யமகம் ' என்ற சொல்லணி வந்துள்ளதைக் காண்க, யமகம்-மடக்கு. ஓரடியில் பல இடங்களிலாயினும், பல அடிகளிலாயினும் முன்


  1. தாழிசை-357
  2. தாழிசை-63