பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


நாட்டு அரசிளங்குமரி ஒருத்திக்கும் பிறந்து, தாய்ப் பாட்டான் நாடாகிய ஈழநாட்டு அரசுரிமையேற்று வாழ்ந்தோனாகிய விக்கம பண்டு போரில் தோற்றான். அவன் மணி மகுடத்தைத் தன் உடைமையாக்கிக் கொண்டான் இராசாதிராசன். சோழர் படையின் தாக்குதலைத் தாங்கமாட்டாது தோற்ற வீரசலாமேகன், தாய், தமக்கை, தன் மனைவி முதலானோரைக் களத்திலேயே கைவிட்டுக் காட்டுள் சென்று மறைந்தான். பின்னர், சோழர் படை வீரர் தன் தமக்கையை மூக்கரிதல் போலும் இழிசெயல் புரிந்தனர் எனக்கேட்டு, மறமும் மானமும் மிகுந்து, மீண்டும் வந்து போரிட்டுமாளவே. அவன் பொன்முடியைச் சோழர் கைக்கொண்டனர். இறுதியாக வந்து போரிட்ட பராக்கிரமபண்டுவும் புறங்காட்டிப் பழியே மேற்கொண்டான். ஈழநாட்டரசர் பலமுறை முயன்றும், சோழர் ஆட்சியை முறியடிக்க முடியவில்லை, ஈழநாட்டில் சோழர் ஆட்சி அத்துணை வலிமையுடையதாக நிலைபெற்றமைக்கு இராசாதிராசனின் பேராற்றலும் போர்ப்பயிற்சியுமே பெரிதும் காரணங்களாம்.

இராசாதிராசன், தன் வாழ்நாட்காலத்தில் மேலைச்சாளுக்கிய மன்னர்களோடு நடத்திய போர்கள் நான்கு. அந்நாட்டில் அவன்பெற்ற முதல்வெற்றி, இளவரசுப் பட்டம் பெற்று, அவன் தந்தையின் ஆட்சிக்கீழ்ப் பணி புரிந்த காலத்தில் ஆகும். சோணாடடிற்கும் சாளுக்கிய நாட்டிற்கும் எல்லையாக விளங்கியது துங்கபத்திரைப் பேராறே. ஆனால் சிற்சில காலங்களில், அவ்வாற்றின் தென்கரை நாடுகள் சிலவற்றைக் கைப்பற்றி ஆளப் சாளுக்கியர் முனைவதும், அஃதறிந்த சோணாட்டுச் படை, சாளுக்கியர்களைத் துங்கடத்திரையின் வட கரைக்குத் துரத்துவதோடுவிடாது, தொடர்ந்து சென்று, அவர்களை அவர்கள் நாட்டிலேயே போரிட்டு வெல்வதும் வழக்கங்களாகிவிட்டன.