பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராணி 19. சந்தன மரங்கள் ஓர் புறம்! அதன் மீது தமது உடலை மோதி யானைகள் தேய்த்ததால் உண்டான மணம், 'கம்' மென்று கிளம்பிற்று. இண்டங்கொடிகள் இங்குமங்குமாகச் சுருண்டு கிடந்தன. மரத்தின் வேரோடு வேர்போல் மலைப் பாம்புகள் உண்ட அலுப்பு தீரப் புரண்டு கிடந்தன. வாகை யும் கூகையும், மூங்கிலும் பிறவுமான பல விருட்சங்கள் விண்முட்டுவோம் என்றுரைப்பதுபோல் வளர்ந்து கிடந்தன. சிற்சில இடங்களிலே குலைகுலுங்கும் வாழையும் காணப் பட்டன. வீரர்கள் தமது கணைகளை விடவே, கரிக் குருவி யும் கானாங்கோழியும், காடையும், கிள்ளையும், மயிலும், மாடப்புறாவும், உள்ளான், சிட்டு, கம்புள், குருகு, நாரை, குயில் முதலிய பறவைகள், பயந்து கூவி, பல்வேறு திசை களிலே பறந்தன. பறக்கும்போது பலவித ஒலி கிளம்பியது. புதியதோர் பண் போன்றிருந்தது. கானாறு ஒரு புறம், காட்டெருமைக் கூட்டம் மற்றோர் புறம், யானை ஒரு புறம், புலி கரடி வேறோர் புறம்! வீறுகொண்ட... மரங்களி' லிருந்து கிலிகொண்டு சிறகை விரித்துப் பறந்தன பெரும் பறவைகள்! குரங்குக் கூட்டம் கீச்செனக்கூவி, கிளை விட்டுக் கிளை தாலி, வீரரின் வாள் வேல் ஒலியால் கிலி கொண்டு குதித் தோடின. வால் சுழற்றின வேங்கைகள். குள்ள நரிகள் ஊளையிட்டன. முட்புதர்களைத் தாண்டிக்கொண்டு சிறுத் தைகள் சினந்தோடின. கருங்கற்களிவே, பிலங்கள் தேடின பாம்புகள்! இத்தகைய காட்சிகளைக் கண்டு களித்து, வில் வளைத்து, கணைகள் தொடுத்து, விரைந்தோடி, வாள் கொண்டு தாக்கி, வேல் எறிந்து வேங்கையும் வேழத் தையும் வீழ்த்தி, வீர விளையாட்டிலே ஒரு நாள் பூரா வும் கழித்தனர். மன்னரும் அவர்தம் பரிவாரமும், வேட் டையிலே கிடைத்த பொருள்களைச் சேகரித்து வீடு திரும்ப மன்னன் கட்டளை பிறக்குமென்று எண்ணிய வீரமணி பொழுது சாய்வதற்குள் ஊர் சென்றால் மீண்டும் ஓர் முறை பூங்காவிலே நடனராணியைக் கண்டு களிக்கலாம்; காட்டிலே கண்ட காட்சிகளை, வேட்டையாடிய செய்தி