பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 கலிங்க களைக் கூறிடலாம் என்று கருதினான். மேலும் அவன் பக்குவமாக ஓர் பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்து வைத் திருந்தான். அதனை நடனராணிக்குத் தர விரும்பினான். ஆனால் அவன் எண்ணியது ஈடேறவில்லை. மன்னன் புதிய தோர் கட்டளை பிறப்பித்தான். 'புறப்படுக காஞ்சிக்கு' என்று கூறிவிட்டான். புரவிகள் காவேரிக்கரை காட்டைக் கடந்து கச்சி செல்ல விரைந்தன. அன்று மாலை! அரசிளங்குமரி அம்மங்கையும், நடன ராணியும், மற்றும் சில தோழியரும், வழக்கம்போல் களித் தாடிக் கொண்டிருந்தனர். நடனராணியின் உள்ளம், காட்டிலே கணைவிடும் காதலன்மீதே இருந்தது. பல வகை விளையாட்டுகளில் பாவையர் ஈடுபட்டனர். பரி வாரங்களுடன் காட்டுக் காட்சிகளையும் இடையே உள்ள நாட்டு மாட்சியையும் கண்டுகளிக்க கச்சி போய்ச் சேரு முன்னம், மன்னன் வருகையை முன்கூட்டிக் கச்சிக் காவல னுக்குக் கூறிட, வீரமணியை விரைந்து முன்னாற் செல்லு மாறு மன்னன் கட்டளையிட்டான். மன்னன் மொழிக்கு மாற்றுமொழி கூறல் எங்ஙனம் இயலும்? பஞ்சவர்ணக் கிளியை, தோழனொருவனிடம் தந்து, அதனைத் தன் காதலியிடம் தந்து, தான் கச்சி நகருக்குக் கடுகிச் செல்லு வதைக் கூறுமாறு வேண்டிக் கொண்டான், செவி மந்த முள்ள அத்தோழன், யாரிடம் கிளியைத் தருவது என் பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. நான் மணம் செய்து கொள்ள இருக்கும் அம்மங்கையை நீ அறியாயோ?' ' என்று வீரமணி அவசரத்துடன் கேட்க, தோழன் அம்மங் கையை அறியேனா! என்று கூறிக் கொண்டே கிளியைப் பெற்றுக் கொண்டான். அவன் மன்னன் குமரி அம்மங்கைத் தேவியையே, வீரமணி குறிப்பிடுவதாகக் கருதினான்! அவ னையே மன்னன் அழைத்து, ஏ! மருதா! விரைந்து நம் நகர் சென்று, ஏழிசை வல்லியாரைச் சேடியருடன் கச்சி வரச்சொல்லு; நாம் அங்குச் சின்னாட்கள் தங்க எண்ணி யுள்ளோம் என்று கூறிட, மருதன் தலைநகர் புறப்பட் டான்.