பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகைவர்களை அழிக்கும் வகை தெரியாதிருந்தனர். ஈழ மும் கடாரமும் கொண்ட சோழ மண்டலத்தில் ஆரிய எதிர்ப்பும் இல்லாமலா இருந்திருக்கும்; ஆனால் மறைந் திருக்கும் அல்லது மறைக்கப்பட்டிருக்கும். மறைக்கப்பட்ட அவ்வரலாற்றைத் தம் கற்பனை மெருகேற்றிக் காட்டுகிறார் ‘கலிங்க ராணி'யாக பேரறிஞர் அண்ணா , கதை மாந்தர்கள் : இப்புதினக் கதைமாந்தருள் குலோத்துங்கன் ஒரு வனே நாம் கற்றறிந்த வரலாற்று மாந்தர்; ஏனையோ ரெல்லாம் கதைக் கருவுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் உயிரூட் டும் கற்பனை மாந்தர்கள். வீரத்தின் இருப்பிடமாய் எதிர்விளைவு முன்னோக்கி அறிவின் பொறுப்பிடமாய், கடமையின் நிலைக்களமாய்த் திகழ்பவன் கதைத் தலைவன் வீரமணி-கதைத் தலைவி கலிங்க ராணியின் காதலன்; வீரமுள்ள நெஞ்சினன்; மன ஈரமுள்ள பண்பாளன்'. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவர் நெறியை அறிவிக்கும் வகையினனாய், தமிழ்க் குலப் பெண்ணின் தகைமையெல்லாம் முழுமைசேரப் பெற்ற மதிமுக மடந்தை நடனரானி, கதையிறுதியில் கலிங்க ராணி. | ஆரியன் என்னும் கதை மாந்தர் கதையின் பெரும் பகுதியை விழுங்கி நிற்கும் கல்லுளி மங்கன். அவனைத் தனிமனிதனாக அல்ல, ஆரியத்தின் முழு உருவமாகப் படைக்கிறார் அண்ணா. குற்றமில்லாத கோவலனைக் கொடுந் தண்டனைக்கு உள்ளாக்கிய கொடுமையின் வடிவ மாய் அமைந்த பொற்கொல்லனுக்குப் பெயர் சூட்டவும் கூசிய இளங்கோவடிகள் போன்று பேரறிஞர் அண்ணாவும் மதிகெடுக்கும் வழியமைத்த ஆரியத்தின் உருவமாய் அமைந்த ஆரியனுக்குப் பெயரிடவும் விரும்பவில்லை.