பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- ' தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லி ளித்து நிற்பது' போன்ற பண்புகளின் புகலிடம் ஆரியப் பெண் கங்காபாலா. அறியாமையால் ஆரியப் படுகுழி வீழ்ந்து அல்லலுறும் மலர்புரி அரசி மருதவல்லி; அவள் அழியப்போகும் வேளை விழிப்பாய் வீரங்காட்டி ஆரியத்தை வீழ்த்திய உத்தமன்; இழிந்தோரின் ஏமாற்றால் திசைமாற்ற வாழ்வு பெற்றோருக்கு நல்வாழ்வளிக்க அரசுடமையும் துறந்த பாண்டியன் என ஒவ்வொரு கதைமாந்தரும் புதினப் பெட்டகத்தின் மணிகளாய்க் காட்சியளிக்கின்றனர், இப்புதினம் தோன்றிய காலக் கட்டத்தில் (1942-43) அறிவு இருள் சூழ்ந்த தமிழர் நெஞ்சில் மனப் புரட்சியை மலர வைக்கவும் ஆரியப் புரட்டுக்களை அம்பலப்படுத்தவும் பழந்தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கவும், விடுதலைக் கனலை மூட்டவும் வேறோர் இலக்கியம் தோன்றவில்லை. இவ்வுண்மை வரலாறு அறிந் தோர் நூலுள் புகுந்து காணலாம். இப்புதின்ம் இதய எழுச்சிக்கும் இன்பக் கலை உணர்வுக்கும் ஓரரிய விருந் தாகும். இந்த ஆய்வு முன்னுரையினை எழுத வாய்ப்பளித்து. கலிங்கராணியை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்தும் அரும்பணியேற்ற பூம்புகார் பிரசுரத்தாருக்கு எமது இதயங் கலந்த நன்றி. பி. இரத்தினசபாபதி