பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 98 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

சிறப்பிக்கிறான் கம்பன். எண் பதிற்கு மேற்பட்ட பாடல்களையுடைய இப்படலத்தில் நிந்தனைப்படலம், இராவணன் பிராட்டியை நோக்கி இழிந்த மொழிகளைக் கூறியிரப்பதும், அவற்றைச் செவியுற்ற பிராட்டி அவனை நிந்தித்து மொழிவதும் ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன. சிலபிரதிகளில் இந்த நிந்தனைப் படலமே இல்லை. முன்பாதி காட்சிப் படலத்திலும், பின்பாதி உருக்காட்டு படலத்திலுமாக அப்பிரதிகளில் இப்படலச் செய்யுட்கள் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இராவணன் வாவுகண்ட அனுமன் நன்றாக மறைந்து கொள்கிறான். சீதையின் முகத்தில் அச் க்களை படர்கிறது. தான் கைகூப்பி வணங்கும் ஈசனிடம் கூட இராவணன் அவ்வளவு இரந்து பணிந்து வழிபடு மொழிகள் கூறி அறியான் சீதாதேவியிடம் அதைக்காட்டிலும் பணிவும் குழைவும் தோன்றக் கூறி இரக்கிறான், என்று அந்தக் காட்சியைக் கம்பன்

கவிக் கூற்றாகச் சொல்லுகிறான்.

ஈசற்கு ஆயினும்

ஈடு அழிவற்று இறை வாசிப்பாடு அழி

யாத மனத்தினான் ஆசைப் பாடும்

அந்நானும் அடர்த்திடக் கூசிக் கூசி

இனையன கூறினான்

(நித்தனைப் படலம்-25) ஈடு-பராக்கிரமம், இறை-கொஞ்சமும், வாசிப்பாடு-பெருமிதம், கூசி-கூச்சப்பட்டு - - இராவணனுடைய அசாத்தியமான இந்தப் பணிவிலும் தேவி

இதைக் கேட்டுத் துரும்பெனக் கனன்று கூறும் சிற்றவுரையிலும் மனோபாவ அழகு செறிந்திருக்கின்றது. காவியம் என்று