பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 105 *

இராவணனுக்குத் கூறப்படுகிறது. ஒரு குரங்கு இவ்வளவு செயலையும் செய்தது, என்பதைக் கேட்டஅவனுக்குப் பரிகாசச் சிரிப்புத்தான் வந்தது.

"ஆடகத் தருவின் சோலை

பொடிபடுத் தரக்கர் கரக்கும் தேடரும் வேரம் வாங்கி

இலங்கையும் சிதைத்த தம்மா கோடரம் ஒன்றே நன்று.இது

இராக்கதர் கொற்றம் சொற்றல் மூடரும் மொழியார் என்ன

மன்னனும் முறுவல் செய்தான் இவ்வாறு கூறி அவன் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கும் போதே அசோகவனத்தை அழித்துவிட்டு அனுமன் Պ*ւնպւն பயங்கர ஆரவாரம் அரண்மனையே கிடுகிடுக்கும்படி அவன் காதிலும் கேட்டது. செவிகள் குலுங்க அவன்அந்த ஒசையைக் கேட்டான். அனுமனின் வீரசெளந்தரியம் காண்டப் பெயருக்கேற்ப இப்படலத்தில் அமைந்துள்ளது.

கிங்கரர் வதை

அசோகவனத்தை அழித்துவிட்டு அனுமன் செய்யும் ஆரவாரத்தைக் கேட்ட இராவணன் புன்னகை முகத்தில் தோன்ற உள்ளே சற்றுப் பொறாமையும் கொண்டான். "கிங்கரர்” என்ற பயங்கரமான அரக்கர்களை அழைத்து "விரைவில் அந்தக் குரங்கைப்பற்றிக் கொண்டு வாருங்கள்" என்று ஆணையிட்டான். - -

"புல்லியமுறுவல் தோன்றப்

பொறாமையும் சிறிதுபொங்க எல்லையிலரக் கர்தம்மில்.

இசைந்த கிங்கரரை யேவி