பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 47 & தோழியிடம் கூறுமுகமாகக் கவித்தொகை முல்லைக் காட்சியுள் காண்கின்றோம்.

"மெல்லிய இயல்பினையுடை தோழி! நான் அன்று ஆடுமேய்க்கும் ஆயர்மகன் சூடிவந்த ஒரு முல்லைச் சரத்தையும் மாலையையும் வாங்கிக் கூந்தலிலே முடிந்து கொண்டேன். பின்பு யான் வீடு சென்றபோது செவிலித்தாய் எனக்கு எண்ணெய் தேய்த்துத் தலைசீவ என் தலையை அவிழ்த்தாள். தாய் தந்தை முதலியோரும் அப்போது வீட்டிலேயே இருந்தனர். அவிழ்த்த தலைலிருந்த தாயும் கண்டு வெகுளி எய்தும்படியாக அப் பூங்கண்ணி செவிலிமுன்னே வீழ்ந்தது. தோழி, இது எப்படி இருக்கிறது என்றால் பிறர் காணாமல் திருட்டுத்தனமாக உண்ட கள்ளானது சிறிது நேரத்தில் பலரும் அறியும்படி போதையைத் தருதல் போல இருக்கிறது.

கள்ளுண்டவன், அப்போது கண்டிப்பாகத் தனது கனவை ஒப்புக்கொண்டு தானே ஆகவேண்டும். அப்படி ஒப்புக்கொண்டாற்போல நமது களவொழுக்கம் கையோடு பிடிபட்டது வெளிப்பட்ட பின்னரும் தாய் அதனை இது எப்படி வந்தது? என்று கேட்கவில்லை , கேர்பம் கொள்ளாது நெருப்பைத் தீண்டினவர்களைப் போல கையை விதிர்விதிர்த்து வெளியேபோய் விட்டாள். தாய் போனபின் யானும். எனது மயிர்ச் சாந்து பூசி உலர்த்தின கூந்தலை முடித்து, நிலத்திலேயே தோயும் பூக்கள் வரைந்த கரையையுடைய என் நீலச் சிற்றாடையை சிறிது தூக்கிக் கொண்டு பக்கத்திலுள்ள தோட்டத்துப் பக்கம் சென்று விட்டேன். - "தோழிநாங் காணாமை யுண்ட

கடுங்கள்ளை மெய்கூர நானாது சென்று நடுங்க

வுரைத்தாங்குக் கரந்தது உங் கையோடு

கோட்பட்டாங் கண்டாய் நம் புல்லினத் தாய்மகன் -

சூடி வந்ததோர் முல்லை ஒரு காழுங்

கண்ணியு மெல்லியால்