பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 61 •

திருக்குறளுக்கு எழுதிய முறையில் பரிபாடலுக்கு எழுதியிருக்கின்றாரா? என்றால் நூலுக்கும் நூலுரையாசிரி யனுக்கும் இடையே உள்ள இயைபைப் பொறுத்த செய்தியாகும் அது. ஆனால் திருக்குறளுக்குச் செய்த முயற்சியைக் காட்டிலும் பரிபாடலுக்கு அவர் செய்திருக்கும் முயற்சி மிகுதிதான் என்று இந்நூலுக்குரிய உரைப்பாயிரம் கூறும் "கந்தி" என்னும் "இலக்கியப்போலி செய்த இடைச் செருகல்களையும். நூலின் உண்மைப் பகுதிகளுக்கு மெய்யுரை காணவும் பரிமேலழகர் நல்ல முயற்சி செய்திருக்கின்றார். பரிபாடல் உரையாசிரியர் பரிமேலழகர் என்பது ஏறக்குறைய பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆழ்வார் திருநகரியில் இருந்த "திருக்குறள் - பதிமேலழகருரை-நுண்பொருள் மாலை" ஆசிரியர் இரத்தின கவிராயராலும் தெரிகிறது. இவ்வுரை பெரும்பாலும் குறிப்புரையாகவே அமைந்திருக்கிறது. இன்றியமையாத இலக்கண அமைதிகளை நன்கு விளக்குகிறது.

பரிபாடற் காட்சிகள்

இனி, நமது தலைப்பிற்கு வருவோம். இதுவரை கூறிய ஆராய்ச்சி

முன்னுரை பரிபாடற் ப்ொழிலுக்குள் நுழைவதற்குரிய தகுதிக்காக

உரைக்கப்பட்டது. இனி, நாம் காணவேண்டியது பரிபாடற்

பொழிலுள் உள்ள சில அழகிய காட்சிகளே ஆகும்.

"இறைவனைப் பற்றிய முடிவான தத்துவங்களையும்.

வையையாற்றின் அழகிய யாற்று வருணனையையும் (River, Description) பரங்குன்றிற் பெருமான், காட்சியையும்,

பழமுதிர்சோலைத் திருமால் காட்சியையும்.

மாமதுரைத்திருநகரின் ஈடில்லாத பெருமாண்பையும் பரிபாடற்

காட்சிகளாக நாம் காண வேண்டும்! அம்முறையிற்

காண்பதுதான் நம்முடைய தலைப்பின் நோக்கம்.

"இலக்கியச்சுவை நுகர்ச்சி வெளியீடு" (Literary Appreciation) என்ற

முறையில் பரிபாடற் காட்சிகளைக் கண்டால் சுவைப்பதற்கு

மிகுதியான இடம்பெறமுடியும். எங்கும் எப்போதும் கவிதை

என்பது கானுங் கண்களைப் பொறுத்த அளவுதான் காட்சி தர முடியும் "கண்களில் உள்ள சுவைநோக்கு வெறுப்பு நோக்கு.

இவைகளுக்குத்தகுந்த முறையிற்றான் பயன்தரும்