பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<< 78 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

மயங்கி நின்றனர் அந்தணர், ஆற்றின் கரையில் வளர்ந்துள்ள மரங்களிற் காய்த்த காய்களும் கனிந்த கனிகளும் உதிர்ந்து மிதந்து வந்தன. சிற்சில கிழங்கு வகைகளைக் கல்லிக் கொணரவும் செய்கிறது வையை வெள்ளம்.

“சேரி இளைஞர்

செலவரு நிலையினர் வலியர் அல்லோர் - துறைதுறை அயர மெலியர் அல்லோர்

விருந்து புனலயரச் சாறுஞ் சேறும்

நெய்யும் மலரும் நாறுபு நிகழும்

யாறு வரலாறு நாறுபு நிகழும்

யாறு கண்டழிந்து வேறுபாடு புனலென

விரை மண்ணுக் கலிழைப் புலம்புரி யந்தனர்

கலங்கினர் மருண்டு!

(பரிபாடல்)

சேரி - புறஞ்சேரி,

அயர-செயலறியாது நிற்க, விருந்து புனலயர்தல்-புதுப்புனல் விளையாடல், சாறு-வாசனைக் குழம்பு, - சேறு-சந்தன கலவை,

நெய்-முடியூக தைலங்கள்,

நாறுபு-நாறி, - விரைமண்ணுக்கவிழை-வாசனைகளைக் கழுவிய புனல்

வையை வெள்ளத்தோடு மக்கள் வெள்ளமுங்கலந்து விட்டாற் பின் தண்ணிர் என்ன பாடுபடும் என்பதைக் கூறவும் வேண்டுமோ? புனலாடும் இன்டமே ஒரு தனி இன்பம். அந்த இன்பத்தை நுகர மதுரை திரண்டது. துறைதொறுங்கூடிவிட்டது திருவிழாக்