பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

|్య

நா. பார்த்தசாரதி. 77

நாவிற் புனைந்த

நன்கவிதை மாறாமை மேவிப்பரந்து -

விரைந்து வினைநந்தத் தாயிற்றே தண்ணம் புனல்"

  • « r (பரிபாடல்)

உராய்-பரந்து, துளும்புதல்-நிறைந்து அலைதல், பொறை-பாரம் பொழிந்தன்று பொழிந்தது, மவிர்புனல்-மிக்குநீர், கதழ்தல்-உறைத்தல், அதர்-வழிகள், பனுவல்-பால், தாயிற்று-பாய்ந்தது, தண்ண்ம்புனல்-குளிர்ந்த நீர்

வையையில் வந்தது புதுவெள்ளம், ஊரவர் நெஞ்சில் வந்தது உவகை வெள்ளம். புதுவெள்ளத்தை அநுபவிக்க புறப்படத் தொடங்கினார். பலர் பலவித வாகனங்களில் ஏறி வையையில் நீராடி வெம்மை தணிக்க விருப்புடன் சென்றனர். தெருக்களெல்லாம் வையை வெள்ள்த்தில் நீராடுவதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வையையாற்றின் கரைகள் திருவிழாவைப் போலச் சீர் பெற்று இலங்குகின்றன, துறைகள்தோறும் மக்கள்குழாம். பல்வகை எண்ணெயும் சாந்தமும் பூசி நீராடும் மாந்தர் நிறைதலால் வையை நெஞ்சுவந்து நகைக்கின்றாள்.

அழகிய பெண் யானைகளின் மேலேறி நீராடச்சென்றனர் பலர். தேர்களின் மேலே சென்றனர் சிலர். குதிரைகளிலும் குதிரைகள் பூட்டிய பலவகை ஊர்திகளிலும் சென்ற மக்கள் அந்ேகர். புறச்சேரியில் நீராடப்புறப்படும் இளைஞர் கூட்டம் என்றுங் காணாதவகையில் கூடியது. வலியவர்கள் கூட்டத்தில்ங்ழைந்து புகுந்து சென்றனர். மெலியவர்கள் துறைகளின் கண்புகுந்து நீராட முடியாமல் துறைகள் வேட்டு நின்றனர். வாசனைக்குழம்புகளின் வகைகளும் சந்தனச்சேறும், நெய்யும், பல்நிற மணமலர்களும் ஒன்றாக விரவிIதந்து எங்கும் நறுநாற்றம் மிகுந்த கிளர்ப்ப வந்தது யாற்று நீர். அவ்வாறு பலவகையாக மகளிரும் இளைஞரும் பூசிக் குளிக்குங்கால் கழுவப்பட்டு வரும் வாசனைப் பொருள்களாலே கலங்கி வருந் தூய்மை இழந்த நீரைக்கண்டு, இது வேறுபட்ட நீரென வெருண்டு தம் கடன்களைச் செய்யாது