பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 85 & சேய்மாடம்-உயர்ந்த மாடம், செவ்வேள்-முருகப்பெருமான், பரங்குன்று-திருப்பரங்குன்று, புத்தேளுலகு-வானுலகம்.

மதுரையைச் சிறப்பிக்கும்போது ஈவாரைப் பாராட்டி ஏற்பார். மகிழ்ச்சியைக் கண்டு தாம் மகிழும் சிந்தை பட்ைத்த மக்கள் வாழும் மதுரை என்று அறத்தின் நாகரிகப் பண்பை விளக்குகிறார் பாடிய ஆசிரியர் எனப்படுவார் என்பது ன்ன்று சிறப்பிக்கப்படுவார் என்னும் பொருள் நயத்தை உட்கொண்டு விளக்கும் இயல்பினையுடையது.

நகரின் அமைப்பு

அமைப்பு முறையிலே அழகிற் சிறந்தவை என்று உலக நகர்களுள்ளே தேர்ந்தெடுத்தால் முதல் இடம் செந்தமிழ்த் திருப்பதியாம் மதுரை நகர்க்கே உரியதாகும். ஆயிரம் இத்ழ்களை விரித்துத் திகழும் அரவிந்த நாள் மலர்போல விளங்குகிறது மதுரை நகரம். நடுவில் அகண்டாகாரமான பரிபூரண சோபையுடன் விளங்கும் திருக்கோயிலும். திருக்கோயிலை நடுப்புள்ளியாகக் கொண்டு ஆரம் ஆரமாக விளங்குகின்ற சிறியவும் பெரியவுமாகிய வீதிகளும் பார்த்து மகிழும் அமைப்பின.

மதுரையின் அமைப்பை ஆயிரவிதழ்த் தாமரையினும் அதிக இதழ்களையுடைய ஒரு தாமரைக்குத்தான் ஒப்பிடுதல் வேண்டும். எத்துணையோ பல தெருக்கள், கவர்வழிகள், முடுக்குகள், வீதிகளெனப் படும் பதினாறு பெருந்தெருக்கள், ஆகிய இதழ்களும், சிற்றிதழ்களும் ஒரு தாமரையாக அன்றோ அது இருக்க வேண்டும்? இன்று இன்னும் பல சிற்றுார்களும், பேருர்களும் மதுரைக்கு அண்மையிலே தோன்றி நகரின் அமைப்பைப் பல வகையிலும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. நகரவை கார்ப்பரேஷனாக (Corporation) மாற வேண்டிய அளவு மதுரை நகரின் தரம் உயர்ந்து கொண்டே போகிறது. r

இதுவரை காட்டிய கருத்துக்களும் படமும் நமது சொந்தக் கற்பனைகள் அல்ல. பரிபர்டலில் மதுரைநகரம் ஒரு அழகிய தாமரை மலராகவே உருவகம் செய்யப் பெறுகிறது. "பூவின் இதழ்களைப் போலத் தெருக்கள் அமையப் பெற்றுள்ளன.