136
மா. இராசமாணிக்கனார்
கதிர்-ஞாயிறு. கனைசுடர்-பேரொளி. இணர்-பூங்கொத்து. ஊழ்கொண்ட-நெருங்க மலர்ந்த. முழவுத்தாள்-முரசுபோல் பருத்த அடி. வீறு-பிறவற்றிற்கில்லாத சிறப்பு. திரு-திருமகள். எவ்வம்-துயர். கூரினும்-மிகினும். இனையன-இவை போலும். நினைவனள்-பிறர் அறியாவாறு மனத்தால் எண்ணி. அனை அரும்பண்பு-அத்தகைய உயர்ந்த பண்பு.
உள்ளுறை: எதிர் எதிர் ஓங்கிய மலைகள், தலைவியின் சுற்றமும் தலைவன் சுற்றமும் ஆம்; அப்பள்ளத்தாக்கு, தலைவன் மனையாம்; வேங்கை தலைவியாம்; அது மலர்ந்து நிற்றல், அவள் மக்களைப் பெற்று மாண்புறுதலாம்; அருவிகள் வேங்கை மீது வீழ்தல், இரு சுற்றத்தாரும் அவளுக்குச் செய்யும் சிறப்புக்களாம்.
9. முறை வரைந்தனர்!
ஓர் இளைஞன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டான். அவளும் அவனைக் காதலித்தாள். ஆயினும் மணந்து வாழும் மனையற வாழ்க்கையில் சென்றது அவள் மனம். அவனும் அதற்கு இசைந்து விரைவில் மணம் செய்து கொள்வதாக வாக்களித்திருந்தான். ஆனால், அது விரைவில் நிகழவில்லை. அதனால் அவள் பெரிதும் வருந்தினாள். அந்நிலை கண்ட அவள் தோழி, அவ்விளைஞனைச் சினந்து கொண்டாள். உடனே அவன், அப்பெண்ணின் பெற்றோரிடம் சென்று மணம் பேசினான். அவர்களும் இசைந்தனர். அதை, அவள் அப்பெண்ணுக்குக் கூறியது இது:
"விடியல் வெங்கதிர் காயும் வேய்அமல் அகல்அறைக்
கடிசுனைக் கவினிய காந்தளங் குலையினை
அருமணி அவிர்உத்தி அரவுநீர் உணல் செத்துப்
பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைபெயல்
உருமுக்கண் உறுதலின் உயர்குரல் ஒலிஓடி
5
நறுவீய நனஞ்சாரல் சிலம்பலின், கதுமெனச்
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!
கால்பொர நுடங்கல கறங்கு இசைஅருவி, நின்
மால்வரை மலிசுனை மலர் ஏய்க்கும் என்பதோ!
புல்லாராப் புணர்ச்சியால் புலம்பிய என்தோழி
10