உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

137


பல்இதழ் மலர்உண்கண் பசப்ப நீ சிதைத்ததை?
புகர்முகக் களிறோடு புலிபொருது உழக்கும் நின்
அகன்மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ!
கடை எனக்கலுழும் நோய் கைம்மிக என்தோழி
தடையின திரண்டதோள் தகைவாடச் சிதைத்ததை? 15

சுடர்உற உறநீண்ட சுரும்புஇமிர் அடுக்கத்த
விடர்வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ!
யாமத்தும் துயிலலள் அலமரும் என்தோழி,
காமரு நல்லெழில் கவின்வாடச் சிதைத்ததை?
எனவாங்கு, 20

தன்தீமை பலகூறிக் கழறலின் என்தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்
பிறைபுரை நுதல்! அவர்ப்பேணி, நம்
முறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே."

இள ஞாயிற்றின் கதிர்களை மறைக்கும் மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையில், மணம் வீசும் சுனையில், அழகிய காந்தள் மலர்க் கொத்தை, மாணிக்கம் விளங்கும் படத்தை உடைய பாம்பு நீர் உண்பதாகக் கருதி, அதை அழிக்க, பெருமலைகளையும் புரட்டுவது போல், காற்றோடு கலந்து பெய்யும் பெருமழை காலத்தில், எழுந்த இடியோசை விரைந்து சென்று. மலைச்சாரலில் முழங்குவதால், சிறு சிறு குடிசைகளில் வாழும் கானவர் துயில் நீத்து எழும் சிறப்பு வாய்ந்த, மலைநாடனே!

புணரப் புணர வெறுப்புத் தட்டாத புணர்ச்சியை விரும்பி, அது பெறாமையால் வருந்திய என் தலைவியின் மலர் போன்ற மைதீட்டிய கண்கள், ஒளி இழந்து போகுமாறு நீ கெடுத்தது, அக்கண்கள், காற்று அலைக்கினும் அசையாத, இனிய ஓசை ஒலிக்கும் அருவிகளை உடைய உன் பெரிய மலைச்சுனையின் மலர்களை ஒத்துள்ளனவே என்னும் பொறாமையினால் தானோ?

உயிர் போகும் இறுதி நிலை வந்துவிட்டது எனக்கூறிக் கலங்குவதற்குக் காரணமான காமநோய், அளவு கடந்து பெருகியதால், என் தலைவியின் தோள்கள், அழகு கெட்டுத் தளரும்படி நீ கேடு விளைத்தது, அத்தோள்கள் புலி, யானையோடு போர் செய்து வருந்தும், அகன்ற உன் மலை மூங்கிலுக்கு நிகராக உள்ளனவே என்ற பொறாமையினால்தானோ?

உன் நினைவால் நள்ளிரவிலும் உறக்கம் கொள்ளாது தடுமாறும் என் தலைவியின் பேரழகு, மேனி நலம் கெடும்படி நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/138&oldid=1769891" இலிருந்து மீள்விக்கப்பட்டது