138
மா. இராசமாணிக்கனார்
கேடு விளைத்தது, அம்மேனி, ஞாயிற்று மண்டலத்தை அளாவிய வண்டுகள் ஒலிக்கும் உன் மலைவேங்கை மரத்தின், நெருப்புநிற மலர்களோடு ஒத்துள்ளது என்ற பொறாமையினால் தானோ?
- இவ்வாறெல்லாம், அவன் கொடுமைகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கவே, களவுக் காலத்தில் வந்து கூடி மகிழ்ந்ததால் உண்டான நட்புத் தொடர்பு, இப்போது அற்றுவிடுவதற்கு அஞ்சி, அவன் வேண்ட, அவன் வேண்டுகோளை ஏற்று அவன் வேண்டியவாறே, அவன் வேண்டிய அந்நாளிலேயே திருமணம் நிகழ, நம் சுற்றத்தவரும் ஒப்புக்கொண்டனர்.
அமல்-நிறைந்த. அவிர்-விளங்குகின்ற. உத்தி-பாம்பின் படம். செத்து-கருதி. மிளிர்த்தல்-கீழ் மேலாகப் புரட்டல். உருமு-இடி. வீய-மலர்களை உடைய. சிலம்பல்-ஒலித்தல். கால்-காற்று. நுடங்கல-அசையா. கறங்கு-ஒலிக்கும். புகர்-புள்ளி. அமை-மூங்கில். கடை என-இறுதிக்காலமாகும் என. கலுழும்-வருந்தும். தடையின-பருத்த. எரி-நெருப்புப் போன்ற. கழறல்-இடித்துக் கூறல். மறையில்-களவொழுக்கக்காலத்தில். புரை-ஒத்த
உள்ளுறை: மலைப்பாறை, தலைவியின் மனை; சுனையிடத்துக் காந்தன். சுற்றத்தார் இடையே வளரும் தலைவி: காந்தள் பாம்புபோல் தோன்றல், களவொழுக்கம் பிறர்க்குத் தீங்குபோல் தோன்றல்; இடியேற்றின் ஒலி மலையிடமெல்லாம் ஒலித்தல், அயலார் கூறிய அலர் கேட்ட தாய் வழங்கிய கடுஞ் சொல்; ஊரார் உறக்கம் ஒழிந்தது, தலைவி உறக்கம் ஒழிந்தது.
10. கூறுவ கூறும்!
காதலால் கட்டுண்டனர் ஓர் இளைஞனும், ஒரு பெண்ணும். அவர் காதல் பெண்ணைப் பெற்றவர்க்குத் தெரியாது. இரவில், எல்லோரும் உறங்கிய பின் அவன் வருவதும், அவன் வரும் வரை அவள் காத்திருப்பதும் வழக்கமாகிவிட்டன. ஒருநாள், வந்த அவனை வரவேற்பது அவளால் இயலாது போயிற்று. அதற்காக அவன் தன்னை நோவானோ என்று வருந்தினாள் அவள். களவுக்
காதலில் உண்டாகும் இவ்விடர்ப்பாடுகளைப் பார்த்த தோழி அவர்கள் திருமணத்திற்கு வழி தேடத் தீர்மானித்தாள். இளைஞனைக் கண்டு, 'அன்று நேர்ந்ததற்குத் தோழியின் பிழையே காரணம் என்று என்மேல் ஏற்றி விட்டு அவளுக்கு ஆறுதல் உரைப்பாயாக' எனக் கூறி அவன் உள்ளத்தில் திருமண உணர்வு உண்டாகுமாறு செய்தாள். அது இது: