உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மா. இராசமாணிக்கனார்


நாற்றஞ்சால் நளிபொய்கை அடைமுதிர் முகையிற்குக்
கூற்றம்போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ?
வகையெழில் வனப்பெஞ்ச வரைபோக வலித்துநீ
பகையறு பயவினை முயறிமன்; முயல்வளவைத்
தகைவண்டு புதிதுண்ணத் தாதவிழ் தண்போதின் 15

முகைவாய்த்த தடம்போலும் இளமையும் நிலையுமோ?
எனவாங்கு,
பொருந்தியான் தான்வேட்ட பொருள்வயின் நினைந்தசொல்,
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்துபோல் மருந்தாகி மனன்உவப்பப் 20

பெரும்பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே."

நறுநுதல் உடையாய்! நம் தலைவர் படைக்கலங்களைச் செப்பம் செய்து அணிந்து கொள்ளவும், அவர் சிந்தையெல்லாம் செல்லும் நாட்டில் செய்ய வேண்டிய செயலில் ஆழ்ந்து விட்டமையால், பேரின்பம் தரும் மாண்புமிக்க அணையில் கிடந்தும் உன்னை ஆரத்தழுவ நினையாது தனித்தே கிடந்து உறங்கவும், நீயே வலிதிற்சென்று அவரைத் தழுவிக் கொண்ட போதும், 'நாம் பிரிந்த விடத்து இவள் எவ்வாறு வருந்துவாளோ?' என்ற ஏக்கத்தின் விளைவால் வறிதே பெருமூச்செறியவும் கண்டு, இவர் உள்ளத்தில் ஒளிந்திருப்பதுதான் யாதோ என்று எண்ணி உன் துயரின் எல்லையைத் தன் உள்ளத்தால் ஆராய்ந்து காணும் அவரிடம் நெருங்கச் செல்லாது ஒதுங்கி இருந்து, அஞ்சி நடுங்கி அழுது வருந்துபவளே இனி நீ நின் அழுகையை விட்டொழிவாயாக!

'தலைவ! உன் மனைவி தன் இயற்கை அழகை இழந்து வருந்தி அழ, நீ அவளைப் பிரிந்து சென்று, உன் காத்தல் தொழில் வன்மையால் பகைவர் நாடு வளம்பெற்று வாழ்வதையே உன் மனத்துட் பெரிதும் கொண்டுள்ளாய்! அவ்வாறு அம்முயற்சியை நீ மேற்கொள்ளும் பொழுது, நீண்ட கதிர்களை உடைய, ஒளிவீசும் முழுத்திங்கள் என்றும் முழுமதியாகவே நிற்காமல், நாளொரு கலையாகத் தேய்வதுபோல், நிலையாக நில்லாது நாள்தோறும் அழிந்து போகும் அவள் முக அழகும் நிலைபெறுமோ?' என்றும்,

'அன்ப! தன்னை அடைந்தவரைக் கொன்று அழிக்கும் ஆற்றல் வாய்ந்த காதல் நோய் வருத்துவதால் உன் மனைவியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/65&oldid=1723677" இலிருந்து மீள்விக்கப்பட்டது