கலித்தொகை - பாலைக் கலி
65
அழகு கெடும் வண்ணம், நீ அவளை விட்டு நீங்கி, பகைவரும் கண்டு மருளுமாறு காட்சி அளிக்கும் அரச செல்வத்தைப் பெற முயலுகின்றாய்! அவ்வாறு நீ முயன்று கொண்டிருக்கும்பொழுது நல்ல மணம் வீசும் நீர் நிறைந்த குளத்தில் இலைகளுக்கு மேலே உயர்ந்து நிற்கும் தாமரை அரும்புகளுக்கு, அவற்றின் மலர்ச்சியே எமனாய் வந்து வாய்ப்பதுபோல் உம் இருவர்க்கிடையே தோன்றிய காதல் அரும்பு மலர்ந்து மாண்புற்ற இக்கற்புக் காலத்து வாழ்நாட்களும், அவளுக்கு கூற்றுவனாய் மாறிவருத்த, அவள் வாழ்நாள் நிலைபெறுமோ?' என்றும்,
'அன்ப! வகைவகையான இவள் வனப்பெல்லாம் அழிந்து போகுமாறு நீ மலைகளைக் கடந்து போய்ப் பகைவரை அழிக்கும் பயன்மிக்க தொழிலை மேற்கொள்ளத் துணிந்துள்ளாய்! அவ்வாறு நீ துணிந்திருக்கும்போது அழகிய வண்டுகள் நாள்தோறும் வந்து, புத்தம் புதிய தேனை உண்ணப் புதிய புதிய மலர்களைப் பூக்குமாறு நாள்தோறும் அரும்புகளை நிறைய ஈனும் பெரிய குளத்தில், நீர் நாள்தோறும் குறைந்துகொண்டே வருவதுபோல், நாள்தோறும் அழிந்து கொண்டே வரும் இவள் இளமையும் நிலைபெற்று நிற்குமோ?' என்றும்,
நம் தலைவரை அடுத்து அவர் விரும்பும் வகையில் நான் எடுத்துக் கூறிய சொற்கள், மீண்டும் உயிர்பெற்று எழுதற்கு ஏற்ற, நிலைபெற்ற உடலில், மருந்துவன் அளித்த மருந்து விரைந்து தொழில் செய்து பயனளித்தாற்போல், பயன் அளிக்க, நாம் மனம் மகிழும்வண்ணம், மீளி போல்வானாகிய நம் தலைவர், தன் போக்கைக் கைவிட்டுத் திரும்பிவிட்டார்.
பாமாண்ட-பல்லாற்றானும் சிறப்புடைய. புடை-ஒருபால். உயிர்த்தல்-பெருமூச்செறிதல். உடையதை-உள்ளத்தில் கருதியதை. ஊறு அளந்து-கேட்டின் அளவை அறிந்து. நடை செல்லாய்-அவள் கூறியவாறு ஒழுகாது. தொல்லெழில்-இயற்கை அழகு. வல்வினை- நாடு காவல். வயக்குதல்-புகழ் பெறுதல். வலித்தி-துணிந்தாய்.
அவிர்-ஒளிவீசும். நெகிழ் போடும்-நிலை குலைந்து கெடும். ஆற்றல் நோய்-கொடிய காமநோய். அட-வருத்த. தோற்றம்சால்-புகழ் மிக்க. நளிபொய்கை-பெருமை பொருந்திய குளம். அடை முதிர் முகை-இலையினும் உயர்ந்த அரும்பு. எஞ்ச-குறைய. பயவினை-பயன் தரும் தொழில். தடம்-குளம். மீளி-பாலைநிலத் தலைவன்.
3, க