கலித்தொகை - பாலைக் கலி
89
வீழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணும் இருந்தும்பி
யாழ்கொண்ட இமிழிசை இயன்மாலை அலைத்தரூஉம்;
தொடிநிலை நெகிழ்த்தார்கண் தோயும்என் ஆருயிர்
வடுநீங்கு கிளவியாய்! வலிப்பென்மன்; வலிப்பவும்
நெடுநிலாத் திறந்துண்ண திரைஇதழ் வாய்விட்ட
20
கடிமலர் கமழ்நாற்றம் கங்குல்வந்து அலைத்தரூஉம்;
எனவாங்கு,
வருந்தினை வதிந்த நின் வளைநீங்கச் சேய்நாட்டுப்
பிரிந்துசெய் பொருட்பிணி பின்நோக்காது ஏகி, நம்
அருந்துயர் களைஞர் வந்தனர்
25
திருந்துஎயிறு இலங்கும்நின் தேமொழி படர்ந்தே."
கருவுற்ற மகளிர்க்கு உண்டாகும் வேட்கைநோய், அவள் இயற்கை அழகை அளவு மீறிக்கெடுத்து விடுவதால், மனம் நொந்த அவள் சுற்றத்தார், பின்னர் மகவீனும் காலத்தில் அவள் படும் நோக்காட்டைக் கண்டு மேலும் வருந்தும்படி மகவீன்ற அம்மங்கை, குலத்தைக் காக்கப் பிறந்த குழந்தையோடு படுத்திருப்பது போல், உழுது பயிரை உண்டாக்கிய உழவர், இடையில் உண்டாகும் நோய் கண்டு வருந்திய வருத்தமெல்லாம் நீங்கும்படி விளைந்த பொருள்களால் உயிர்களைக் காப்பாற்றிய நிலம் மகவு ஈன்ற மாசு நீங்கிய பெண் புதிய பொலிவு பெற்று விளங்குவதுபோல், கதிர் ஈன்ற காலத்தில் பசுமை இழந்து கிடந்த நிலையைவிட்டுப் புத்தம் புதிய தளிர்களால் புது அழகு பெறவும், மகளிர் கட்டி விளையாடும் மணல் வீட்டில் உள்ள, பாவையும், அதற்குச் சூட்டிய மாலையும் போல, வரிவரியாகக் காட்சி அளிக்கும் மணல் மலர்களால் ஆன வடுவைப் பெறவும், இளம் பெண்களின் மயிர்போல, மணல் மேட்டை ஊடறுக்கும் அருவி நீர் மெல்ல ஒழுகவும், மாந்தளிர்மேல், மாமை நிற மகளிரின் மார்புத் தேமல் போல், மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிர்ந்து படியவும், பெருமை மிக்க இளவேனிற் பருவம் வந்துவிட்ட இக்காலத்தில்,
சேய்மைக்கண் உள்ள நாட்டில் வாழும் காதலரிடத்தில் சென்று விட்ட நெஞ்சை, நீ கூறும் அளவிற்கு மேலாகவும் அடக்கி வைப்பேன்; ஆனால், என் ஆற்றலையும் மீறிக்கொண்டு, மலர்ந்து குளிர்ந்த மலர்களைத் தீண்டி அவற்றின்