கலித்தொகை - பாலைக் கலி
97
மணக்கும் தன் கூந்தலில் நிறையச் சூடி மகிழ்வாளாக' என்று காதலர் கூறிவிட்ட செய்தியைத் தூது சொல்ல வந்துளது. ஆகவே, பெண்ணே! அவ்வேனிற் பருவத்தைத் துயர்மிகும் சொற்களைச் சொல்லிச் சினக்காமல் இனிய சொற்களை வழங்கி வரவேற்று விருந்தளித்து வழிபடுவோமாக!
எஃகு-கத்தரிகை. துவர்-புலர்ந்த. நெறித்தன்ன-பிடித்து விட்டாற்போன்ற. ஈகை-பொன். நெறிகொள-ஒழுங்காக வீழ்ந்து கிடக்க. ஈர்பெய்யும்-எண்ணெய்ப் பசைகொண்ட. நுடக்கம்-ஆட்டம். இணர் ஊழ்த்த-மலர்க்கொத்துக்களை ஈன்ற. குரற்கு-கூந்தலுக்கு.
32. குயிலையும் அவரையும் புலவாதி!
'வேனிற் பருவத் தொடக்கத்தில் வந்து விடுவேன்' என்று அளித்திருந்த வாக்குறுதி பொய்யாகாமல், வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் கணவன். ஆனால், 'வேனிற் பருவம் வந்து விட்டதே; அவர் வரவில்லையே' என அதற்குள்ளாகவே வருந்தத்தொடங்கி விட்டாள் மனைவி. அந்நிலையில், அவன் தேரைத் தெருக்கோடியில் கண்ட தோழி, 'வந்து விட்டார் அவர், வருந்தாதே நீ' என்றது இது:
"வீறுசால் ஞாலத்து வியல்அணி காணிய
யாறுகண் விழித்தபோல், கயம்நந்திக் கவின்பெற
மணிபுரை வயங்கலுள் துப்புஎறிந் தவைபோலப்,
பிணிவிடும் முருக்கிதழ் அணிகயத்து உதிர்ந்துஉகத்,
துணிகயம் நிழல்நோக்கித் துதைபுடன் வண்டார்ப்ப,
5
மணிபோல அரும்பூழ்த்து, மரமெல்லாம் அலர்வேயக்
காதலர்ப் புணர்ந்தவர் கவவுக்கை நெகிழாது
தாதுஅவிழ் வேனிலோ வந்தன்று, வாரார், நம்
போதுஎழில் உண்கண் புலம்ப நீத்தவர்;
எரிஉரு உறழ இலவம் மலரப்,
10
பொரிஉரு உறழப் புன்குபூ உதிரப்,
புதுமலர்க் கோங்கம் பொன்னெனத் தாதூழ்ப்பத்
தமியார்ப் புறத்துஎறிந்து எள்ளி முனியவந்து,
ஆர்ப்பது போலும் பொழுது; எண்ணி அந்நலம்
போர்ப்பது போலும் பசப்பு;
15