உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கலியன் குரல் ஓங்குபைந்தாள் கண்ணார் கரும்பின் கழைதின்று வெகி கழுநீரில் மூழ்கி செழுநீர்த் தடத்து மண்ஏந்து இனமேதிகள் வைகும் நாங்கூர்,ே கண்ஆர் - கனுக்கள் நிரம்பிய கழை-கரும்பு; வைகி-தாமதித்து நடத்து; தடத்து - தடாகத்தில்; மேதி-எருமை; என்று காட்டுவர். வயல்களில் இளைய எருமைகள் கரும்புத் தலையாடியை மேய்ந்து அளவு மீறித் தின்னதாலே, நகர்ந்து செல்லமாட்ட மல், இருந்தஇடத்திலேயே இடம். வலம் கொண்டு அசைபோடுகின்றன; பிறகு மெதுவாக நடந்து சென்று செங்கழு நீர்ப்பூக்கள் நிரம்பியிருக்கப்பெற்ற அழகிய நீர் நிரம்பிய தடா கத்திலே மூழ்குகின்றன; குட்டையின் சேற்றில் கொம்புகளைக் குத்தி மண்ணுருண்டையைப் பெயர்த் தெடுத்துத் தாங்கிக் கொண்டு கிளம்பி, பின்னர்க் கரையேறவும் முடியாதபடி அவ் விடத்திலே தாமதித்துக் கிடக்கின்றன’’ என்கின்றார். இப்பாசுரத்தைப் பிள்ளை விழுப்பரையரும் ஆப்பானும் கூடி அதுசந்தித்துப் பொருள் நோக்குங்கால் - மூன்றாம் அடியில் வைகி’ என்று ஒருமுறை வந்துள்ளது; நான்காம் அடியிலும் வைகு’ என்று மீண்டும் வந்துள்ளது. இப்படித் திரும்பவும் கூறுவதற்குப் பொருளென்ன? என்று ஐயுற்றுப் பட்டரைப் பணிந்து கேட்க, அவர் அவ்விடத்து எருமைகளின் இளமைத் தன்மை (சொகுமார்யம்) விளக்கப்பட்டதாகின்றது; முரட் டெருமைகளாயிருந்தால் பதறிப்பதறி நடக்கும்; சுகுமாரமான எருமைகளாகையினாலே வைகி வைகிக் கிடக்கின்றபடி?’ என்று அருளிச் செய்தசராம். வைகுதல் விளம்பித்தல், தாமதமாக இருத்தல். {5) து:விரிய மழைக்கி’ என்ற பதிகம் தலை வனைப் பிரிந்த தலைவி வண்டு முதலியவற்றை நோக்கி இரங்கிக் கூறுதலாக அமைந்தது. இங்கு ஓர் ஐதிகம்: நஞ்சீயர் 帝エs 6 88. பெரி, திரு 3:6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/101&oldid=775466" இலிருந்து மீள்விக்கப்பட்டது