உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் நோய் வாய்ப்பட்டு இருக்கையில் அவர்தம் சீடர்களில் (ரீபாதத்து முதலிகளில்) ஒருவரான பெற்றி என்பவர் விசாரிக்கச் சென்று உரையாடுகையில் 'இப்போது சுவாமிக்கு என்ன திருவுள்ளம் என்று கேட்க, அதற்கு நஞ்சீயர், ‘துவிைரிய மலருழக்கி திருப்பாசுரங்களைக் காதாரக் கேட்க வும், பெருமாள் எழுந்தருளப் பின்னும் முன்னும் வந்து சேவிக்கவும் விருப்பமாயுள்ளது என்று அருளிச் செய்தார். உடனே வரந்தரும் எம்பெருமாளரையர் என்பவரை எழுத் தருளப் பண்ணிக் கொண்டு வந்து இத் திருவாய்மொழியைச் சேவிக்கச் சொல்லிக் கேட்டருளா நிற்கையில், நான்காம் பாசுரத்தில், தானாக நினையானேல் தன்னிணைந்து நைவேற்குஓர் மீனாய கொடிநெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ? (4) என்னும் அளவில் வந்தவாறே நோவுபடுவதற்கு முன்பு வந்து உதவாமற்போனாலும், நேர்ந்த நோயைப் போக்கு வதற்காகிலும் வந்தாலாகாதோ?’ என்றருளிச்செய்து மிகவும் தளர்ந்து வருந்தினாராம், ஆகவே, இத் திருமொழி பகவத் காமுகர்களை நன்கு உருக்கும் என்பது வெள்ளிடைமலை. (7) அர்ச்சையில் எம்பெருமானைக் காணும் திரு மங்கையாழ்வார் அவனுடைய விபவாவதாரச் செயல்கள் பல வற்றைத் திருவுள்ளங் கொண்டு அவனது திருக்குணத்தில் தன் மனத்தை ஈடுபடுத்துவர்.

  • அன்று பேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து

விளையாட வல்லானை வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை (2. 5. 3) என்பது கடல் மல்லைத் தலசயனப் பெருமாள்மீதுள்ள பாசுரப் பகுதி. இதில் "வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/102&oldid=775468" இலிருந்து மீள்விக்கப்பட்டது