உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ கவியன் குரல் என்பதற்கு நஞ்சீயர் பொருள் கூறிக் கொண்டிருக்கும்போது அதனைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்னை பழகிய மணவாளப் பெருமாளரையர் என்பவர் பராசர பட்டர் அருளிச் செய்த வேறு பொருளை அவரிடம் சமர்ப்பித்தாராம். அப்பொருள்: கண்ணன் மலைமீதுள்ள காடுகளில் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது இளங்கன்றுகள் அங்குள்ள தடாகங்களில் நீர் குடிக்கப் புகும்போது நீரில் முன்னே இறங்கிக் குடிக்க அஞ்சுமாம். அக்கன்றுக்கு நீருண்ணும் விதத்தைப் பழக்கு வதற்காகக் கண்ணன் தன்முதுகில் கைகளைக் கட்டிக் கொண்டு கவிழ்ந்து நின்று தண்ணிரமுது செய்து காட்டுவானாம். இங்குக் காட்டிய சொற்றொடர் கண்னனின் இச் செயலைக் குறிப்பிடுகின்றது என்பாராம் பட்டர். பாசுரத்தை அநுபவித்த பட்டரின் திறனை நாம் எண் ணி எண்ணிப் போற்றுகின்றோம், நெய்தல் கிலக் காட்சிகள்: திருநாகை அழகியாரை அநுபவித்த ஆழ்வார், நாயகி பாவனையுடன் (சோழநாட்டுத் திருத்தலப் பயணத்தை முடித்துக் கொண்டு) திருப்புல்லாணிக்கு வரு கின்றார், திருப்புல்லாணிப் பாசுரங்களால் அற்புதமான நெய்தல் திலக்காட்சிகளை அதுபவிக்கின் மார் ஆழ்வார். ராமேசு வரத்தில் கடல் அமைதியாக இருப்பது போல், திருப்புல்லாணிக் கடல் அமைதியாக இல்ல்ை; அங்குக் கடல் மிகக் கொந்தளிப் புடன் உள்ளது. பொருது முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணி ே என்று பேசுவர் ஆழ்வார். இதற்குப் பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்தஉரை: உத்தேச்ய ஸித்திக்ரு இருந்த இடம் விட்டுப் போக வேண்டாத தேசம்; பொருள்வயிற் பிரி 67 பாண்டி நாட்டுத்திருப்பதிகளுள் ஒன்று. இஃது இராமநாத புத்திற்குத் தெற்கே ஏழு கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றுனர். கடற்கரையருகிலுள்ளது. இராமநாதபுரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. 68 பெ. திரு. 9, 3:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/103&oldid=775470" இலிருந்து மீள்விக்கப்பட்டது