உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 அருளிச் செயல்கள் இலக்கிய இன்பம் கொட்டாய் பல்விக்குட்டி! குடம்,ஆடி உலகளந்த மட்டார் பூங் குழல் மாதவ னைவர கொட்டாய் பல்லிக்குட்டி! " என்பது பல்லிப்பாசுரம். இங்ஙனமே செம்போத்து, காக்கைப் பிள்ளை, பைங்கிளி, கோழி என்று புள்ளினத்தை அழைத்துப் பாடும் பாசுரங்களும் உள்ளன. பழமொழிகள்: ஒருநாட்டின் பண்பாட்டை உணர்வதற்கு அந்நாட்டு மொழியுள் வழங்கும் பழமொழிகள் பெரிதும் பயன் படுவன. பழமொழிகளே அந்நாட்டு மக்கள்பால் அடிபட்டு வரும் மன இயல்புகளை எடுத்துக்காட்டுவன. பழமொழிகள் பயின்று வரச் செய்யுள்கள் இயற்றும் தன்மை பேரறிஞர் நூல்களில் காணப் படும். நாட்டுமக்களிடம் பயின்றுவரும் சில பழமொழிகளைப் பெரும் புலமை வாய்ந்த பரகாலரின் பாசுரங்களிலும் காணலாம். சிலவற்றைக் காட்டுவேன் கார்ஆர் புரவிஏழ் பூண்ட தனிஆழி, தேர் ஆர் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு ஆரா அமுதம் அங்குஎய்தி அதில் நின்றும் வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது திற்க ஒர்.ஆர் முயல்விட்டுக் காக்கையின் போவதோ? : என்ற பாசுரப் பகுதியில் முயலை விட்டுக் காக்கைப் பின் போவாருண்டோ?’ என்ற பழமொழியைக் காணலாம். நிலத்தில் ஒடுவது முயல்; மரங்களின்மீது பறந்து திரிவது காக்கை. மாமிசம் வேண்டுவோன் கைப்பட்ட முயலை விட்டுக் கைப்பட அரியதும் கைப்பட்டாலும் பயன்படாததுமான காக்கையைப் பின்பற்றித் திரிதல் அறிவற்ற செயல். அப்படியே எளிதாயும் சுவை மிக்கதாயு முள்ள அர்ச்சாவதார அநுபவத்தை விட்டுக் கிட்டுதற்கு அரிதாயும் சுவையற்றதாயுமுள்ள மோட்ச அது 77. பெரி, திரு. 10. 10:4 78. சிறிய திருமடல் - கண்ணி 6-8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/114&oldid=775493" இலிருந்து மீள்விக்கப்பட்டது