உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 12 கலியன் குரல் கான் ஆட, மஞ்ஞைக் கணம் ஆட, மாடே கயல் ஆடு கால் நீர்ப் பழனம் (ஷை 3 2: ),

  • பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ்வாய்

பனை நெடுந்தோள் பிணைநெடுங்கண் பால்ஆம் - இன்சொல் மட்டு அவிரும் குழவி (விஷ 3, 4: 8) 'உம்பரும் இல் ஏழ்உலகும் ஏழ்கடலும் உண்ட பிரான்” (டிை 3, 10: 3), கன்றதனால் விளவு எறிந்து கணிஉதிர்த்த காளை, காமருசீர் முகில்வண்ணன் (டிெ 3. 10: 8), உளங் சுனிந்திருக்கும் அடியவர்தங்கள், உள்ளத்து ஊறியதேன்’ (டிை 4, 3; 91, கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் (ஷை 4, 8, 1), ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் 1ண்டி 4. 8: 6), பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை' {ண்டி 2, 5: 8), "கடிகைத் தடங்குன்றின் மிசைஇருந்த அக்காரக் கனியை (டிே 8. 9: 4), முன்னம் குறள் உருவாய் மூவடிமண் கொண்டளந்த மன்னன் (ஷெ 9. 4: 2) என்பன போன்ற சொற்கோவைகள் எழுப்பும் படிமங்களைக் கண்டு மகிழலாம். இனி, சிறப்பாக ஒவ்வொருபுலனையும் பொதுவாகப் பல புலன்களையும் கவரும் படிமங்களைக் கண்டு மகிழ் வோம். கட்புலப் படிமங்கள்: பல்வேறு படிமங்களிடையேயும் கட் புவினைக் கவரும் படிமங்களே அதிகமாக உள்ளன. இவையே படிப்போரின் மனத்தில் நிலையான பதிவினை விளைவிக் கின்றன. கட்புல் நரம்பு ஏனைய புல நரம்புகளைவிடத் தடித் திருப்பதே இதற்குக் காரணம் எனக் கருதலாம். இதன் காரணமாகவே இக்காலக் கல்வியில் கட்புல செவிப்புலத் துணைக் கருவிகள் அதிகமாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. பள்ளிகளில் சுற்றுலா அமைத் இ! மாணாக்கர்களைப் பல்வேறு இடங்கட்கு இட்டுச் சென்று பல்வேறு காட்சிகளை நேரில் கானச் செய்கின்றனர். திருமங்கை மன்னன் பாசுரங்களில் இத்தகைய ஒரு படி மத்தைக் காட்டுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/119&oldid=775502" இலிருந்து மீள்விக்கப்பட்டது