உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fiš அருளிச் செயல்கள் - இலக்கிய இன்பம் பவ்வந்ர் உடை ஆடை ஆகச் சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்விமர் திரம்எட்டும் தோளா அண்டம் திருமுடியா தின்றான்.பால் செல்ல கிற்பீர்ே எம்பெருமான் உலக உருவமாயிருக்கும் நிலையைத் திருமங்கை யாழ்வார் அநுபவித்து மகிழ்கின்றார் இப் பாசுரத்தில். எங்கும் பரவியுள்ள (விபுவான) எம்பெருமானுக்குக் கடல் நீர் ஆடை யாகின்றது; பூமிப் பரப்பெல்லாம் திருவடியாகின்றது; வாயு மண்டலம் திருமேனியாகின்றது; திசைகள் எட்டும் திருத்தோள்க ளாகின்றன. அண்டகடாகம் திருஅபிடேகமாகின்றது. இந்தப் பேருருவம் கட்புலப் படிமமாக அமைந்துள்ளது. செவிப்புலப் படிமங்கள்: காதினால் மட்டிலும் கேட்டு உள் ளத்தைப் பறிகொடுக்கச் செய்யும் படிமங்கள் இவை. இவ் வகையில் ஒன்றைக் காண்போம். சிலம்பின் இடைச் சிறுபரல்போல் பெரிய மேரு, திருக்குளம்பில் கணகணப்ப திருஆ காரம் குலுங்க,நில மங்கைதனை இடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியளம் கோமான் : இது திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்துச் செங்கண்மால் மீதுள்ள பாசுரம், இதில் கணகணப்ப’ என்பது மட்டிலுமே செவிப்புலப் படிமம். சிறுபரல், பெரிய மேரு, திருக்குளம்பு, திரு ஆகாரம், நிலமங்கை, கோமான் - இவை கட்புலப் படிமங்கள்; குலுங்க, இடந்து, புல்கி - இவை இயக்கப் புலப் படிமங்கள். இதில் வராக அவதாரக் காட்சியைக் கலவைப் படிமம் அற்புத மாகப் புலப்படுத்திக் காட்டுவதைக் கண்டு மகிழலாம். 83 பெ. திரு. 6. 6:3. 84. பெரி. திரு. 4. 4, 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/120&oldid=775507" இலிருந்து மீள்விக்கப்பட்டது