உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#14 கலியன் குரல் சுவைப்புலப் படிமங்கள்: நாவினால் பெறும் அநுபவத்தைத் தரும் பாசுரங்கள் அதிகமாகவே காணப்பெறுகின்றன. இறை வனே ஆரா அமுதனாக இருக்கும்போது அவனைப்பற்றி துவலும் பாசுரங்களில் இத்தகைய பாசுரங்கள் மிகுதியாக இருப்ப தில் வியப்பில்லை. வேங்க டத்து அரி யைப்பரி கீறியை வெண்ணெய் உண்டுஉர வின் இடை ஆப்புண்ட தீங்க ரும்பினை தேனை நன் பாலினை அன்றி, என்மனம் சிந்தைசெய் யாதே,8 ஆழ்வார் திருறையூர் எம்பெருமானை அநுபவிக்கும் பாசுரம் இது. இதில் வெண்ணெய் உண்ணல் சுவைப்புலப் படிமம். எம்பெருமானைக் கரும்பு, தேன், பால் என்று உருவகம் செய் யும் பொழுது சுவைப்புலப் படிமங்கள் நம் மனத்தில் எழுகின் றன. அவனை அப்பொருள்களாகவே அநுபவித்து மகிழ் கின்றோம். அடுத்த பாசுரத்திலும் எம்பெருமான் அம் கட்டியை கரும்பீன்ற இன்சாற்றை' என்று உருவகித்து அநுபவிக்கும்பொழுது சுவைப்புலப் படிமங்களை நம் மனத்தில் எழுப்புவதை அறியலாம். இவரே திருமெய்யத் தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை "திருமெய்யத்து இன்னமுத வெள்ளம்' என்று உருவகித்து இனியராகும்போது நம் மனம் சுவைப்புலப் படிமத்தால் நிறைந்து விடுகின்றது. காற்றப்புலப் படிமங்கள்: மூக்கினால் முகர்ந்து அநுபவிக்கக் கூடிய காட்சிகளாக அமைந்திருப்பவை இவை. மங்கை மன்னன், தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலைை 5 பெரி. திரு. 1.3:5 86 ഒക്ട. 7, 3: 6 87 ഒക്ട 2. 5: 3 88. பெரி. திரு. 4; 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/121&oldid=775510" இலிருந்து மீள்விக்கப்பட்டது