உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 பொழிவு 3 3. அருளிச் செயல்கள் - தத்துவக் கருத்து நேபர்களே, திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் வைணவம். இது பல உயர்ந்த கொள்கைகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பரத்த சமயமாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் திருமாலைப்பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப்பெறுவதால் இந்த உயரிய சமயத்தின் தொன்மை அறியப் படும். வைணவ சம்பிரதாயப்படி அச்சமயத்தைச் சிறப்பித்த வராகக் கருதப்பெறும் பெரியோர்கள் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் என்று இருவகைப்படுவர். ஆழ்வார் திருமாலடியார்கள். அவர்கள் இருமாலின் மங்கள குணங்களாகிய அமுத வெள்ளத்தில் மூழ்கி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுவர் என்னும் காரணத்தி னால் அவர்கட்கு ஆழ்வார்கன் என்னும் திருநாமம் ஏற்பட்டது. வைணவர்கள் இவர்களை அவதார புருஷர்கள் எனக் கருதி வழிபடுவர். இதனை விளக்குவதற்கு முன்னர் வேறொரு கருத் தினை விளக்கவேண்டியது இன்றியமையாததாகின்றது. அஃதா வது, எம்பெருமானின் திருமேனியைப் பற்றியது அது. எம்பெருமான் கருடனுடைய உடலாய் நிற்கும் வேதத்தின் பொருளாய் நிற்பவன். இவன் திருமேனியில் சீவன் இரத்தினங் களுள் சிறந்த கெளஸ்துபமாகவும், முல்ப் பிரகிருதி ரீவத்ஸம் என்னும் மறுவாகவும், மான் என்னும் தத்துவம் கெளமோதகி என்னும் கதையாகவும், ஞானம் நந்தகம் என்னும் வாள் (கத்தி) ஆகவும், மருள் வாளின் உறையாகவும், தாமசாகங்காரம் சார்ங்கம் என்னும் வில்லாகவும், சாத்விகாகங்காரம் பாஞ்ச சன்னியம் என்னும் சங்காகவும், மனம் சுதர்சனம் என்னும் சக்கரமாகவும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பத்தும் அம்புகளாகவும், தந்மாத்ரங்கள் ஐந்தும் பூதங்கள் ஐந்தும் ஆகிய இருவித பூதங்களின் வரிசையும் வன மாலையாகவும் இப்படி எல்லாத் தத்துவங்களும் எம்பெரு, மானுக்கு ஆயுதமாகவும் ஆபரணமாகவும் இருப்பதாகக் கருதுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/127&oldid=775521" இலிருந்து மீள்விக்கப்பட்டது