உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2} அருளி செயல்கள் - தத்துவக் கருத்து வைணவ மரபு. அதாவது எம்பெருமான் சேதகம், அசேதநம் என்னும் தத்துவங்கள் அனைத்தையும் ஆபரணமாகவும் ஆயுதமாகவும் க்ொண்டுள்ளான். இவை திவ்யாபரணாழ்வiார்கள் திவ்வியாபுதாழ்வார்கள் எனப்பெயர் பெறுகின்றன. நித்தியசூரி களையே இவ்வடிவங்களாகக் கருதுவது வைணவ மரபு. கம்மாழ்வாரின் திருமேனி: ஆழ்வார்கள் பன்னிருவருள் சடகோபர் கம்மவர் என்று போற்றத் தக்க பெருமை வாய்ந்து 'கம்மாழ்வார்’ என்ற சிறப்புத் திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றார். ஏனைய ஆழ்வார்களை நம்மாழ்வாரின் ஒவ் வோர் அவயவமாகவும், நம்மாழ்வாரை அவயவியாகவும் வழங்குவது வைணவ மரபு. ஆழ்வாரின் திருமுடி நம்பெரு மாள். பூதத்தாழ்வாரைத் தலையாகவும், பொய்கை பேயாழ் வார்களைத் திருக்கரங்களாகவும், பெரியாழ்வாரைத் திருமுக மண்டலமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும் குலசேகராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் திருக்கை களாகவும், தொண்டரடிப்பொடியாழ்வாரைத் திருமார்பr கவும், திருமங்கையாழ்வாரைத் திருதாபியாகவும், மதுர கவிகளையும் எம்பெருமானாரையும் திருவடிகளாகவும் பெரியோர் அருளிச் செய்வார். நம்மாழ்வார் திருமாலின் திருவடியில் எப்போதும் விளங்குகின்றார் என்பது வைணவசமயக்கொள்கை. அதனர்ல் திருமால் திருக்கோயில்களில் அப்பெருமானைச் சேவிக்கச் செல்வோரின் முடிமீது அவருடைய திருவடியாக வைக்கப்பெறுவதைச் சடகோபன், சடாரி” என்று வழங்கு கின்றனர். சடகோபன் சடாரி” என்பன நம்வாழ்வாரின் திருப்பெயர்கள் என்பது அறியத்தக்கது. இதனால் நம்வாழ்வாரின் தத்துவமே ஏனைய ஆழ்வார்களின் தத்துவமாகும்.அதாவது, வைணவ தத்துவம் ஆகும். இவ்விடத்தில் ஓர் உண்மையை நினைவிற்கொள்ள வேண்டும். சாத்திர நூல்கள் தத்துவங்களை விளக்குதற்காக 1. தே.பி. 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/128&oldid=775523" இலிருந்து மீள்விக்கப்பட்டது