உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல்


مبینہ---میr ۔ یہ مہ:... مند۔۔

எழுந்தவை; ஆதலால் அவற்றில் தத்துவங்கள் அளவை முறையில் கோவையாக எடுத்து விளக்கப்பெறும். ஆனால், தோத்திர நூல்கள் எம்பெருமானின் புகழ் பாடுபவவை. இவற்றில் தத்துவக் கருத்துக்கள் கோவைப்பட அமைந்திருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அவை ஆங்கொன்றும் ஈங்கொன்று மாக அமைந்திருக்கும். திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல் களை ஆராயும்போது இந்த உண்மை தெளிவாகும். ஆகவே, காம் தெளிவாக அறியும் பொருட்டு இந்த மூன்றாவது பொழிவில் முதலில் வைணவ தத்துவம் இன்னதென விளக்கி, அதன் அடிப்படையில் ஆழ்வாரின் அருளிச் செயல்களின் அத்தத்துவக் கருத்துகள் அமைந்திருப்பதைக் காட்டுவேன். ஆகவே, முன்ன தாக வைணவதத்துவம் இன்னதென்பதை விளக்குவேன். வைணவ சமயத்தின் கொள்கைகளை (1) தத்துவம் (2) இதம் {3} புருஷார்த்தம் என்று சுருக்கமாக விளக்கி வைக்கலாம். 1. தத்துவம்: முதலில் தத்துவத்தை விளக்குவேன். தத்துவங்கள் மூன்று. அவை சித்து, அசித்து, ஈசுவரன் என்று வழங்கப்பெறுவன. சித்து என்பது, உயிர்களின் தொகுதி; ஆன்மாக்களின் கூட்டம் அசித்து என்பது, மக்கள், விலங்கு முதலியவற்றின் உடம்புமுதலிய உலகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் காரன் மான பிரகிருதி என்பது; இதனை மூலப்பிரகிருதி எனவும் வழங்குவர். ஈசுவரன் என்பவன், இறைவன். இவை மூன்றும் தத்துவத்திரயம்’ (திரயம்-மூன்று) என்ற பெயரால் வழங்கி வருகின்றன. சித்து ஞானத்திற்கு இடமான ஆன்மா அல்லது உயிர் சித்து என வழங்கப்பெறுகின்றது, இஃது அன்னமயம், பிராண மயம், மனோ மயங்கட்கு அப்பாலாயிருப்பது. தேகம், இந்திரியங்கள், மனம், பிராணன், ஞானம் இவற்றிற்கு வேறுபட்டது. அறியும் தலைவனும், அறிவும், அறியப் பெறும் பொருளும் தாகனாவே இருப்பது. அணுவின் அளவினையுடைய இந்த ஆன்மா ஆனந்த வடிவத்தைக் கொண்டது; என்றும் நிலைபெற்றிருப்புது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/129&oldid=775524" இலிருந்து மீள்விக்கப்பட்டது