உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் ததியாராதனை: கலியன் தன் கையிலகப்பட்ட செல்வத்தை யெல்லாம் பாகவதர்கட்கு அமுது படைத்திடுவதிலேயே செல. வழித்தார். அரசனுக்குச் சேரவேண்டிய பகுதிப் பணமும் இதிலேயே கழிந்தது. நாளடைவில் இவரது செயல் வெளிப்பட அரசன் இவரை ஒரு தேவாலயத்தில் காவலில் இட்டான் என்றும், பின்னர் கலியன் மூன்று நாள் அமுதுசெய்யாமல் உப வாசம் இருந்தார் என்றும், பிறகு காஞ்சிப் பேரருளாளர் (வரதராசர்) திருவருளால் இவர் பெரும்பொருளைக் கச்சியிற் பெற்று அரசனுக்குரிய கப்பப் பணத்தைக் கொடுத்து தம் கடனைத்தீர்த்துக் கொண்டார் என்றும், மிகுதிப் பணத்தைத் ததியாரா-தனத்தில் செலவழித்தார் என்றும் குருபரம்பரை முதலிய வரலாறுகள் கூறும். இந்த நிகழ்ச்சியின் பின்னரும் ததியாராதனை செய்யமுடி. யாமல் பொருள் முட்டுப்பாடு ஏற்பட்டது. தாம் நீர்மேல் நடப்பான் முதலிய நால்வரையும் துணை கொண்டு ஆறலைத்தாகிலும் பொருளிட்டி இப்பொருளைக் கொண்டு ததியாராதனையை இடை விடாது நடத்த வேண்டும் என்று உறுதிகொண்டு அந்த அடாத செயலிலும் இறங்கினார். ஒருநாள் திருமணம் கொல்லை என்ற ஊர்ப்புறத்தில் ஒர் அரசமரத்தில் பதுங்கியிருந்தார். அப்பொழுது அந்தணர் ஒருவர். மணவாளக் கோலத்துடன் புது மணம் புனர்ந்த தம் மனைவியுடன் எல்லாவிதப் பொன் அணிகளைப் புனைந்து கொண்டு அதிகச் செல்வத்துடனும் பெருந்திரளுட லும் சென்று கொண்டிருந்தார். இதனைக் கண்ட கலியன் வாளும் கையுமாய்ப் பரிவாரங்களுடன் இவரை வளைத்துக் கொண்டார். தம்பதிகளின் அணிகளையெல்லாம் கழற்றச் செய்து அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டினார். திருமணமான 5. வேகவதி தீரத்தில் பொருள் புதைந்து கிடக்கும் இடத்தை அடை வானமாகக் காட்டியருளினதாக வரலாறு கூறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/13&oldid=775526" இலிருந்து மீள்விக்கப்பட்டது