உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கலியனின் வாழ்வும் வழியும் வராதலால் கால் விரலில் பொன்னாலான அது காழி மோதிரம் (மெட்டி என்றும் சொல்வர்) காணப்பட்டது. அதையும் கழற்றித் தருமாறு கேட்டார்; கழற்ற முடியவில்லை. உடனே மாப்பிள்ளை யின் காலைப் பிடித்துக் கொண்டுத் தம் பல்லால் கடித்து வாங்கினார். கட்டிவைத்த முட்டையைத் தூக்க முயலும் போது தூக்க முடியவில்லை; பேர்க்கவும் முடியவில்லை. உடனே மறையவரை நோக்கி 'நீர் ஏதோ மந்திரம் செய்தீர்’ என்று சொல்லி நெருக்க, அந்த மந்திரத்தை உமக்கும் சொல்லு கின்றேன்' என்று கழுத்தை அணைத்தார். கலியனும் சம் மதித்து, நீர் சொல்லாவிடில் இந்த வாளுக்கு இரையாவீர்என்று தம் கையிலுள்ள வாளைக் காட்டி அதட்டினார். உடனே மறையவரும் மூன்று பதமாப் , எட்டு எழுத்துகளாய் இலங்கும் சகல வேதசாரமான திருமந்திரத்தைக் கலியனின் வலத்திருச் செவியில் செவிக்கின்பமாய் முன்பு நர-தாராயணராய்த் தமக்குத் தாமே சொல்லிக் கொண்ட குறைதீர உபதேசித்தார். அன்றியும், தாமும் பெரியதிருவடிமேல் காளமேகம் போன்ற திருமேனியுடன் (திவ்விய மங்கள விக்கிரகத்துடன்) சேவை சாதித்தார். இவ்வாறு வழிப்பறி செய்யப்பட்டவர் ஆண்டாளை மணம் செய்து வந்த திருவரங்க பெருமர்னே என்று ஆழ்வார்களைபற்றிக் கூறும் திவ்வியசூரி சரிதம் குறிப்பிடும். இங்ஙனம் யாதொகு காரணமும் பற்றாது கிடைத்த திருமந்திரத்தையும், அதற்கு உள்ளீடான சீமந் நாராயண னுடைய சொரூட ரூப குண விபூதி சேஷ்டிதங்களையும், 8. பிரபத்தி (சரணாகதிர் ஆகிவிட்டது. 7. மூன்றுபதம் = ஓம் + தமோ + நாராயணாய 8. எட்டு எழுத்தாய் ஒம் (1) + நமோ (1+1)+நாராயணாய {1 + i + 1 + 1 + 1) = 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/14&oldid=775549" இலிருந்து மீள்விக்கப்பட்டது