உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் அருள்மாரி என்னும்படியான பெரிய பிராட்டியாரின் அருளினாலே கண்டு அதுபவிக்கின்றார்; தானும் திருமங்கையாழ்வார் என்ற பெயருடன் ஆழ்வாராகின்றார். இந்த அநுபவத்தின் விளை வாக, வாடினேன்; வாடி , வருந்தினேன் மனத்தால்; பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன்; கூடி, இளையவர் தம்மொடு அவர்தரும் கலவியே கருதி ஒடினேன்; ஓடி, உய்வதோர். பொருளால் உணர்வெனும் பெரும்பதம் திரிந்து நாடினேன்; நாடி, நான் கண்டு கொண்டேன் நாரா யனாஎன்னும் நாமம்.ே (போருத்துயர் - அளவற்ற துக்கங்கள்; இடும்பை -- துன்பம்; இனையவர் - ேெண்கள்: உணர்வு எனும் பெரும்பதம் . ஞானம்) என்ற முதல் திருமொழியின் முதற்பாசுரம் தொடங்கி பத்துப் பாசுரங்களால் முதல் திருமொழியை முடிக்கின்றார். இதன் தொடர்ச்சியைப் பின்னர் விளக்குவேன். திருமந்திரத்தின் வரலாறு: இந்த இடத்தில் திருமந்திரம்: என்னும் மூலமந்திரம் பிறந்த வரலாற்றைத் தெரிவிப்பது இந்தப் பொழிவிற்குப் பொருத்தமாகும் எனக் கருதுகின்றேன். 8 பேசி, திரு 1:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/15&oldid=775573" இலிருந்து மீள்விக்கப்பட்டது