உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கவியன் குரல் களைப் பெற்றுத் துக்க பரம்பரைகளை அதுபவிக்கும் சம்சாரி களாவர். முத்தர்என்பவர், இவ்வுலகத் தளைகள் கழிந்து பரம பதத்தில் பகவத் துபல கைங்கரிய போகரானவர்கள் ஆவர். நித்தியர் என்பவர், ஒருநாளும் சம்சார சம்பந்தம் இல்லாத அனந்தன், கருடன், சேனை முதலியார் தொடக்கமானவர் கனாவர். - அசித்து: அசித்து என்பது அறிவில்லாத பொருள். இது, விகாரத்திற்கு இடமானது. அதாவது முன்னைய நிலைகளை விட்டு வேறு நிலைகளை அடைவதாகின்ற வேறுபாட்டிற்கு இட மாய் இருக்கும். இந்த அசித்து இராஜஸ் தாமஸங்கள் கலவாத சுத்த சத்துவம் என்றும், இராஜஸ் தாமலங்கள் கலந்த மிச்ரதத்து வம் என்றும், சத்துவம் முதலிய குணங்களற்ற சத்துவசூனியம் என்றும் மூவன்கப்படும். சத்த சத்துவம்: இஃது ஆதல், அழிதல் இல்லாதது; ஞானத் தையும் ஆனந்தத்தையும் உண்டாக்கக் கடவது. இறைவன் அநுபவத்தின் பொருட்டே உண்டான இச்சையாலே நித்திய விபூதியில் (பரம பதத்தில்) விமானம், கோபுரம், மண்டபம், உப்பரிக்கை முதலிய வடிவுடன் தோற்றக்கடவது. இது வைகுந் தத்திலிருந்து மேலே எல்லையின்றி எங்கும் பரவி நிற்கும். நெருப்பு, கதிரவன் முதலிய ஒளியுள்ள பொருள்களும் மின் மினிக்கு ஒப்பாம்படி அளவிறந்த ஒளிவடிவானது; கண நேரத்திற்குக் கணநேரம் முன்பில்லாத வியப்பினை உண்டாக்க அல்லதாக இருக்கும். தித்தியர், முத்தர், ஈசுவரன். இவர்கள் ஞானத்தால் தன்னை அறிய வொண்ணாதபடி ஒளிவிட்டுத் திகழும். ஆனால் சம்சாரிகட்கு அங்ங்னம் தோற்றாது. மிச்ர தத்துவம்; இதில் சாத்துவிகம், இராசசம், தாமசம் ஆகிய மூன்றும் கூடி கர்மவான்களாகிய சம்சாரி சேதநருடைய ஞான ஆனந்தங்கட்கு மறைவை உண்டாக்கும்; அதுவல்லாத தனை அதுவாக நினைக்கும் விபரீத அறிவினையும் விளைவிக் கும். இஃது உற்பத்தி விநாசமில்லாதது. இஃது ஈசுவரனுடைய உலகப்படைப்பு முதலியவற்றிற்கு விளையாட்டுக் கருவியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/131&oldid=775530" இலிருந்து மீள்விக்கப்பட்டது