உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to:5 அருளிச் செயல்கள் - தத்துவக் கருத்து இருந்து, ஏற்றத்தாழ்வு உள்ள இடம் அவை இல்லாத இடம என்ற இடவேறுபாட்டாலும், அழிக்கும் காலம் படைப்புக் காலம் ஆகிய இரண்டு வகையான கால வேறுபாட்டாலும், சூக்கும விகாரங்களையும் துல விகாரங்களையும் உண்டாக்கக்கடவது. இந்த மிச்ர தத்துவம் பிரகிருதி, அவித்யை, மாயை என்ற பெயர் களாலும் வழங்கப்பெறும். இந்த மிச்ச தத்துவம் இருபத்துநான்கு வடிவங்களாக இருக் கும். அதாவது சேதநரைப் பூரிக்கும்படிச் செய்யும் சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் ஆகிய புலன்கள் ஐந்தும்; மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகிய பொறிகள் ஐந்தும்; வாக்கு, கால், கை, வாய், உபத்தம் ஆகிய கருமேந்திரியங்கள் ஐந்தும்; மண், நீர், எரி, கால், ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்தும்; இங்குள்ள அந்த ஆன்மாக்கள் பொருந்தியுள்ள மூலப்பிரகிருதி ஒன்றும்; மகத் (மான்) தத்துவம் ஒன்றும், அகங்காரதத்துவம் ஒன்றும், மனம் ஒன்றும் என இருபத்து நான்காம். இந்த இருபத்து நான்கு தத்துவங்களையும் கலந்து தான் ஈசுவரன் தானாகவும், நான்முகன் மூலமாகவும் இந்த அகிலத்தைப் படைக்கின்றான். சத்துவ சூனியம் இது கால தத்துவம் என்றும் வழங்கப்படும். இஃது எங்கும் பரந்து நிற்கும் ஒரே திரவியம். இதில் சத்துவம் முதலிய பிரகிருதியின் மூன்று குணங்களும் இல்லை. எதிர், நிகழ், கழிவு முதலிய விவகாரங்களுக்கு இதுவே காரணம் ஆகும். 3. புருஷன் (ஆன்மா), பரமான்மா (புருஷோத்தமன்) ஆகிய இரண்டும் சேர்ந்து வைணவதத்துவம் 26 அகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/132&oldid=775532" இலிருந்து மீள்விக்கப்பட்டது