உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியன் குரல் திமிடம், விநாடி, நாழிகை முதல் பார்த்தம் வரையிலுள்ள பகுதிகளெல்லாம் இதனுடையனவே, இஃது ஈசுவரப் படைப்பின் பரிணாமங்களுக்குக் காரணமாய், தோற்றம் ஈறுஅற்றதாய், அவனுடைய படைப்பு அளிப்பு அழிப்பு ஆகிய விளையாட்டிற்குக் கருவியாய் அவனுக்கு உடலாகத் திகழும். வைகுந்தத்தில் முன்பின் என்ற அளவிற்குக் காலம் உளதேயாயினும், அதன் சம்பந்தமின்றி அனைத்தும் எம்பெருமானது சங்கற்பத்தால் மட்டிலும் நடப்பனவாகும். சரீர சரீரி பாவனை: மேற்கூறிய அசித்தின் மூன்று பகுதிகளும், ஒவ்வோர் ஆன்மாவும் இறைவனின் திருமேனியாக உள்ளன என்பது வைணவ தத்துவம், திருமங்கையாழ்வார், திடவிசும்பு ஏரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத்து உயிர்களும் மற்றும் படர்பொருள் களுமாய் நின்றவன். 5 என்ற பாசுரத்தில் இந்த இரண்டைச் சேர்த்துக் கூறுவதைக் கானலாம், பல்வ நீர் உடையாடை ஆகச் சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்விமா திரம்ாட்டும் தோளா அண்டம் திருவடியா நின்றான். : என்பதில் அசித்தை மட்டிலும் இறைவனது உடலர்கக் காட்டுவர். நம்மாழ்வாரும், 4. முத்திநெறி (பக் 45-46) என்ற எனது நூலில் (பாரி நிலை யம், 184, பிரகாசம் சாலை, சென்னை - 600 108) காண்க. 5. பெரி. திரு. 4, 3: 3. 6, ఙ. §, 6: 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/133&oldid=775534" இலிருந்து மீள்விக்கப்பட்டது