உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கலியன் குரல் கைவரன் சீமந் நாராயணனே சர்வேசுவரன். இவன் எப் போதும் மாறுபடாத் தன்மையுடையவன். சக்தி ஞானம் ஆனந்தம் அனந்தம் இவற்றின் சொரூயமாக இருப்பவன். இடத் தாலும் காலத்தாலும் அளவிடப்பெறாதவன். மூன்றுவித சேதந. அசேதந பரிணாம ரூபமான வேறு பாட்டின் குறைகள் (விகாரதோஷங்கள்) தட்டாதவன், . பிறப்பொடு மூப்புஒன்று இல்லவன் தன்னை பேதியா இன்பவெள் ளத்தை இரப்பு:எதிர் காலம் கழிவும் ஆனானை' 1 பேதியா-விகாரம் அடையாத) என்று குறிப்பிடுவர் பரகாலர். அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு வகைப் பட்ட பலன்களையும் உயிர்கட்குத் தந்து அவற்றின் புகலிட மாக இருப்பவன். தன் சொரூபத்தாலும் திருமேனியா லும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன், தனிமாப் புகழே, எஞ்ஞான்றும் நிற்கும் படியாய்த் தான்தோன்றி முனிமாப் பிரம முதல்வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனிமாத் தெய்வம். என்று கூறுவர் நம்மாழ்வார். ஞானம் சக்கி பலம் ஐசுவரியம் வீரியம் தேஜஸ் முதலிய மங்களகுணக் கூட்டங்களால் அலங் கரிக்கப் பெற்றவன். அவனிடம் இக்குணங்கள் ஆதல் அழிதல் இன்றி எப்பொழுதும் நிறைந்திருக்கும். இவற்றைத் தவிர வாத் சல்யம், செளச்ல்யம், செளலப்பியம் முதலிய எண்ணற்ற குணங் களையும் கொண்டவன்.' - 15. பெரி. திரு. 4. 3: 2 16. திருவாய் 8, 10; 7 17. முத்திநெறி - கடிதம் 6 பக் 49-55 விவரம் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/137&oldid=775543" இலிருந்து மீள்விக்கப்பட்டது