உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:9 அருளிச் செயல்கள் தத்துவக் கருத்து ஆனால் உடல் யிர் இவ்விரண்டினுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை இக் கருத்தினை ஆழ்வார். புலனொடு புலன் அலன்." என்று. சுருக்கமாக உரைத்துள்ளார். பிறிதோரிடத்தில் இதனையே, . யாவையும் எவர்க்கும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான் ; உணர்வின் மூர்த்தி: ஆவிசேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே," (யாவை-அசேத நம்; எவரும்-சேதநர்; சமயம்-நிலை; தோய்வு-கலப்பு; பாவனை- எண்ணம்} என விரிவாகவும் வெளியிட்டுள்ளார். உயர்திணை அஃறிணை யாகிய எல்லாப் பொருளுள்ளும் இறைவன் கலந்து நின்று அவற்றின் அவத்தைகள் தன்னைத் தொடராதபடி இருக்கின்றான். உடலிலுள்ள உயிர் அவ்வுட்லுக்குரிய வளர்ச்சி தேய்வு நரை திரை முதலிய விகாரங்களை அடைவதில்லை என்பதை நாம் உணர்வோமாயின், அவ்வுடல் உயிர் இரண்டின் விகாரங் களும் இறைவனை அடைவதில்லை என்பதையும் உணரலாம் என்பது இராமாநுசர் அருளிய விளக்கம் ஆகும்.' 12, திருவாய், 1.1:3. 13. டிை, 3.4:10 14. ஈட்டின் தமிழாக்கம் - 3,4, 10 இன்உாை காண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/136&oldid=775541" இலிருந்து மீள்விக்கப்பட்டது