உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#28 கலியன் குரல் விடத்தில் விரிவாக விளக்குவது பொருத்தமாகும். உயிர் உடலில் இருந்து அதனைத் தரித்திருக்கச் செய்கின் றது. உயிரின்றேல் உடல் வீழ்ந்து விடுதல் கண் கூடு. மேலும், உயிர்தான் உடலை இயக்குகின்றது. உயிர் உடலுக்குத் தலைவனாக உள்ளது. அங்ங்னமே இறைவன் எல்லாப் பொருளுள்ளும் இருந்து அவற்றைத் தரிக்கச் செய்து, அவற்றைத் தன் விருப்பம்போல் நடத்தி அவற்றிற்குத் தலைவனாகவும் இருக்கின்றனன். ஆயினும், உடலினுள் உயிர் இருப்பதற்கும் எல்லாப் பொருளினுள் இறைவன் இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. உயிர் அணு அளவினதாய் உடம்பினுள் ஓரிடத்திலிருந்து. தன். ஞானத்தால் (தர்மபூத ஞானத்தால்) உடல் முழுதும் வியாபித்து இவ்வுடம்பைப்பற்றிய நிகழ்ச்சிகளை உணர்த்து கின்றது. இறைவன அங்ங்ணமின்றி ஒவ்வொரு பொருளுள்ளும் முழுவதும் தன் சொரூபத்தோடு வியாபித்துள்ளான். அன்றியும், உடலினுன் உயிர் இருப்பதற்கும் உடல் உயிர் ஆகிய இரண்டினுள் இறைவன் இருப்பதற்கும் மற்றொரு வேறுபாடும் உண்டு. உயிர் உடலினுள் இருக்கும் போது அவ்வுடலுக்குரிய வளர்ச்சி தேய் வுகள் (விகாரங்கள்) உயிருக்கு உன்டாவதில்லை. ஆனால், ஆவ்வுடலைப்பற்றிய இன்ப்துன்ப உணர்ச்சிகள், அறிவின் சுருக்கம்; பெருக்கம் ஆகியவை உயிருக்கு உண்டு. உடலின்மீது தண்ணிய காற்று வீசுங்கால் இன்புறுதலும் தீ சுடுங்கால் துன் புறுதலும் உடலினுள் இருக்கும் உயிருக்கு நேரிடுகின்றன. இனி, குழந்தைப் பருவத்தில் அதனுள் இருக்கும் உயிரின் அறிவு சுருங்கிய நிலையிலிருந்து பின்பு வளர்ச்சியுறுதலைக் காண் கின்றோம். மற்றும், மக்கள் உடம்பினுள் உள்ள உயிர் ஜம் பொறியறிவும் உடையதாக உள்ளது. அவ்வுயிரே மரம், எறும்பு முதலிய உடல்களில் புகுந்தால் ஜம்பொறியறிவு மின்றிச் சில குறையவும் பெறுகின்றன. இனி, உயிர் பருஉடலைப் பெறாத நிலையில் அறிவு சுருங்கியிருத்தலும், பருஉடலைப் பெற்ற நிலையில் அறிவு விரிந்திருத்தலும் உண்டு இங்ங்ணமாக உைேலப் பற்றி நிற்கும் உயிர் அவ்வுடலுக்கேற்ப இன்பதுேன்ப உணர்ச்சி களும், அறிவின் சுருக்கமும் பெருக்கமும் அடைதல் தெளிவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/135&oldid=775538" இலிருந்து மீள்விக்கப்பட்டது