உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t32 கலியன் குரல் உலகம் யாவைவும் தாம்.உள் வாக்கலும் நிலைபெறுத்தலும் நீங்கலும் நீங்கலா அலகி லாவிகளை யாட்டுடை யாரவர்? என்று விளக்குவன். ஆழ்வார்களின் பாசுரங்களில் அவன் தோய்ந்து நின்ற நிலையே இக்கூற்றுக்குக் காரணமாகலாம். உண்டு உமிழ்தல்: மேற்குறிப்பிட்ட ஒரு பாசுரத்தில் 'உண்டு உமிழ்தல்’ என்ற ஒரு தொடர் வருகின்றது. இங்குக் கூறும் சில பாசுரங்களிலும் இதே தொடர் காணப்பெறுகின்றது. ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும், நானிலம்சூழ் வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும்" என்ற திருநாங்கூர் பார்த்தன் புள்ளிப் பாசுரத்திலும் (தாய்ப் பாசுரமாக வருவது), பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால் தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மரல்28 என்ற திருவெள்ளியங்குடித் திருப்பாசுரத்திலும், அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும் அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்' என்ற திருநறையூர்பற்றிய பாசுரத்திலும் இத்தொடர் வருவதைக் காணலாம். 24. கம்பரா. காப்பு 23. பெரி. திரு. 4. 8: 5 25. ஷே 4, 10: 5 27. டிே 6, 6: 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/139&oldid=775547" இலிருந்து மீள்விக்கப்பட்டது