உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33 அருளிச் செயல்கள்-தத்துவக் கருத்து

  • இங்கு உண்ணால்’ என்பது அழித்தலையும், உமிழ்தல்” என்பது படைத்தலையும் குறிக்கின்றது. முன்னது உலக மிருக்கும் நிலையில் இருக்கும் இருப்பையும் பின்னது பருப் பொருளாக இருக்கும் இருப்பையும் குறிக்கின்றன. இவற்றை விளக்குவதற்கு முன்னர் வேறொரு கருத்தையும் உளங் கொள்ளல் வேண்டும். உயிரல்லாத உலகப் பொருள் அனைத்திற்கும் மூலப்பகுதியே (பிரகிருதியே) காரணமாகும். ஒரு பொருள் உண்டாவதற்கு மூன்று காரணங்கள் கூறுவதுண்டு. அவை முதற் காரணம், துண்ணக் காரணம், நிமித்த காரணம் ஆகும். மண் பானையாக வனையப்பெறுமிடத்து மண் முதற் காரணம்; அதாவது காரியமாக மாறுவது முதற்காரணம். வடமொழியில் இஃது உபாதானகாரணம்’ என்ற பெயரைப் பெறும். இங்கு மண் பானையாக மாறிற்று. முதற் காரணமாக வுள்ள ஒரு பொருளைக் காரியமாக மாற்றவல்ல கர்த்தாவை நிமித்த காரணம் என்று கூறுவர். இங்குப் பானையை வனைய வல்ல குயவன் நிமித்த காரணம் ஆகின்றான். அவன் குடத்தை வணைவதற்குக் கருவியாகவுள்ள சக்கரம் முதலியவை துணைக் காரணம். இது வடமொழியில் சஹகரரி காரணம்’ என்று வழங்கப்பெறும். இங்குப் பானையாகிற காரியமாவதற்கு மூன்று காரணங்களும் வெவ்வேறு பட்டிருப்பதைக் காண்கின்றோம் இப்படியின்றி உலகத் தோற்றத்தில்-உலகம் உண்டாகிய, காலத்தில்- ஈசுவரனே மூவகைக் காரணங்களாக உள்ளிான் , இதுவே வைணவ தத்துவமாகும்.

சித்தும் அசித்தும் சூக்குமமாக (நுண்மையாக) இருக்கும் நிலையில், அதாவது உலகஉற்பத்திக்கு முன்னர் அவற்றுக்குள் இறைவன் அந்தரியாமியாக சங்கல் பத்தோடு இருக்கும் நிலை யில் - இறைவன் உலகிற்கு முதற்காரணமாகின்றான். இங்ங்ணம் நுண்ணிய நிலையில் இருக்கும் சித்து அசித்துகளை வெளிப் படுத்தி உலகப்படைப்பு செய்வோம் என்று இறைவன் எண்ணு கின்ற நிலையில் இறைவன் உலகிற்கு நிமித்த காரன் ாக அமை கின்றான். இறைவனுடைய ஞானம் சக்தி முதலியவையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/140&oldid=775550" இலிருந்து மீள்விக்கப்பட்டது