உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 கலியன் குரல் துணைக்காரன மாகின்றன. ஆக, இறைவன் இம்முறையில் உலகப் படைப்பிற்கு மூன்று காசங்கனளுமாக உள்ளான் என்று மெய்விளக்க அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். இக்கருத்தினை ஆழ்வார் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தும்ஆய், முதலில் சிதையாமே மனம்செய் ஞானத்து உன்பெருமை மாகனாதோ? மாயோனே! 28 தானேசர் உருவே தனி வித்தாய்த் தன்னின் மூவர் முதலாய் வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் * எப்பொருட்கும் வேர் முதலாய் வித்துமாய்ப் பரந்து தனி நின்ற கார்முகில் வண்ணன் என்கண்ணன் ' என்ற பாரசுப் பகுதிகளிலும் வேறுபல பாசுரங்களிலும் இவற்றைக் கண்டு தெளியலாம். மேற்கூறிய மூன்று காரணங்களுள் இறைவன் உலகிற்கு முதற்காரணம் என்பது மிகவும் முக்கியமானது. இதனையும் தெளிவாக்குவேன். காரணப் பொருள் பின் காரியப் பொரு ளாக மாறுவது முதற் காரணம் என்பது பொதுவிதியாகும். இங்கு இறைவனே இவ்வுலகப் பொருள்களாக மாறினான் என் றால் அங்ஙனமன்று. இவ்வுலகப் பொருள்கட்கு அவற்றின் நுண்ணிய நிலை முதற் காரணம். பருப் பொருளாக மாறிய நிலைமை காரியம். இறைவன் நுண்ணிய நிலையிலுள்ள சித்து அசித்துகளில் உள்ளேயும் அத்தர்யாமியாக உள்ளான். நுண் மையான சித்து அசித்துகளில் இறைவன் அந்தர்யாமியாக 28. திருவாய் 1. 5: 2, 29, டிை 1, 5: 4 30. ஷெ 2.8: 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/141&oldid=775552" இலிருந்து மீள்விக்கப்பட்டது